பக்கங்கள் செல்ல

Friday, December 2, 2016

எதிர் தொடர் 22: அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்ற முடியாது

ஏக இறைவனின் திருப்பெயரால்

     இந்த தொடரில் கட்டுரையாளரின் சில அறிவார்ந்த????? கேள்விகளுக்கு பதில் அளிக்கவுள்ளோம் இன்ஷா அல்லாஹ்.


கேள்விகள்:
 
நமது பதில்
     முதலில் கட்டுரையாளர் 6:34 குர்ஆன் வசனம் குறித்து அவரது புரிதலின் குறைகளை விளக்கினோம் என்றால் அவரது கேள்விகளின் தரத்தை புரிந்து அந்த கேள்விக்களுக்கு சரியான பதில்களை பெறவியலும்.



وَلَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِنْ قَبْلِكَ فَصَبَرُوا عَلَى مَا كُذِّبُوا وَأُوذُوا حَتَّى أَتَاهُمْ نَصْرُنَا وَلا مُبَدِّلَ لِكَلِمَاتِ اللَّهِ وَلَقَدْ جَاءَكَ مِنْ نَبَإِ الْمُرْسَلِينَ (٣٤)

       6:34. (முஹம்மதே!) உமக்கு முன் சென்ற தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் பொய்யரெனக் கருதப்பட்டதையும், தொல்லைப்படுத்தப்பட்டதையும் சகித்துக் கொண்டனர். முடிவில் அவர்களுக்கு நமது உதவி வந்தது. அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றுபவன் யாருமில்லை. தூதர்கள் பற்றிய செய்தி உமக்கு (ஏற்கனவே) வந்துள்ளது.

      மேற்கூறிய வசனத்தை சற்று நிதானித்து வாசித்தாலே இந்த வசனம் என்ன கூறுகிறது என்பது விளங்கி விடும். ஆனால் கிறித்தவ வலைதளத்தில் இருந்து சுட்டதால் கட்டுரையாளர் அவர் குறிப்பிடும் வசனத்தை கூட தெளிவாக வாசிக்கவில்லை போலும்.

மேற்குறிபிட்ட வசனம் கூறுவது என்னவென்றால்:
 
     இதற்கு முன்பும் தூதர்கள் அனுப்பப்பட்டனர். அவர்கள் பொய்பிக்கப்பட்டனர், அவர்களுக்கு இறுதியில் உதவி வந்தது. அல்லாஹ்வின் இந்த கட்டளையை மாற்றுவது யாரும் இல்லை. அதாவது இறைவன் விதித்ததை யாராலும் மாற்ற முடியாது என்பதுதான் பொருள். இது ஏனோ கட்டுரையாளருக்கு விளங்கவில்லை.

       மேலும் மேற்கூறிய வசனத்தில் இடம் பெறும் كَلِمَاتِ اللَّهِ என்பதற்கு அல்லாஹ்வின் வார்த்தை என்பதுதான் பொருள். இந்த பதம் இடம் பெறும் சில இடங்களை குறிப்பிடுவதன் மூலம் இந்த பதத்தின் உன்மையை விளக்கத்தை அறிய வியலும்

لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الآخِرَةِ لا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ (٦٤)
 


        10:64. இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் அவர்களுக்கு நற்செய்தி உண்டு. அல்லாஹ்வின் கட்டளைகளில்  மாற்றுதல் இல்லை. இதுவே மகத்தான வெற்றி.

     மேற்கூறிய வசனத்தில் நம்பிக்கையாளருக்கு நற்செய்தி என்று இறைவன் விதித்தை யாராலும் மாற்ற முடியாது என்று மேற்கூறிய வசனம் கூறுகிறது.

وَمَرْيَمَ ابْنَتَ عِمْرَانَ الَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهِ مِنْ رُوحِنَا وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا وَكُتُبِهِ وَكَانَتْ مِنَ الْقَانِتِينَ (١٢)


    66:12. இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன்னுதாரணமாகக் கூறுகிறான்) அவர் தமது கற்பைக் காத்துக்கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருந்தார்.

  
     இறைவனிடம் இருந்து வந்த வேதத்தை மட்டும்தான் அல்லாஹ்வின் கட்டளை என்ற பதம் கூறவில்லை. வேதம் என்பது இறைவனின் வார்த்தைதான் என்றாலும் இறைவனின் வார்த்தை அதுமட்டுமல்ல என்பதை விளக்குகின்றன. மேலும் இறைவனின் வார்த்தை என்ற பொதுவான வார்த்தை இடம் பெறும் வசனத்திற்கு ஏற்ப மாறுபட்ட பொருளை தரும் என்ற குர்ஆனின் அடிப்படை அறிவே இல்லமால இஸ்லாமிய விமர்சனத்தில் இறங்குவதை என்னவென்பது. இதுவே கட்டுரையாளரின் மேற்குறிபிட்ட முதல் இரண்டு கேள்விக்கான பதிலாகும்.



கேள்வி 2: அல்லாஹ் வேதத்தை பாதுகாக்க முடியாதா;

   

    அல்லாஹ் பலவீனமானவாக இருப்பதால்தான் வேதத்தை பாதுக்காக்கவில்லை என்று கட்டுரையாளர் வாதிடுகிறார். அல்லாஹ் நாடவிட்டாலும் தான் அருளியதை பாதுக்காக்க மாட்டான். மேலும் அல்லாஹ் பின் வருமாறு குர் ஆனில் கூறுகிறான்.

      13:39. (அதில்) அல்லாஹ் நாடியதை அழிப்பான். (நாடியதை) அழிக்காது வைப்பான்.³⁰ அவனிடமே தாய் ஏடு உள்ளது.

      இதைதான் நாம் கூறுகிறோம். அல்லாஹ் முன் சென்ற ஏடுகளை பாதுக்காக்க விரும்பவில்லை. அதானால்தான் யூதர்கள் எவ்வளவோ முயன்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட தோராவை அவர்களால் பாதுக்காக்க முடியவில்லை. இன்றிருக்கும் குர்ஆன் பாதுக்காக்கப்படும் முறைகளை யூதர்கள் பின்பற்றியும் அவர்களால் தோராவை பாதுக்காக்க முடியவில்லை என்பதைதான் யூதர்களின் வரலாறு காட்டுகிறது. மனனமிட்டு பாதுகாத்த தோரா குறித்தும், அதை எழுத்து வடிவில் பாதுகாக்க முயன்றும் அவர்களுக்கு பயனளிக்கவில்லை என்பதை முன் சென்ற தொடர்களில் கண்டோம். ஆனால் குர்ஆன் அதே முறைகளினால் பாதுகாக்கப்பட்டுள்ளது. எந்தளவிற்கு என்றால் இன்றிருக்கும் எழுத்துபிரதிகள் அனைத்தும் அழிக்கப்பட்டாலும் மீண்டும் இன்றிருக்கும் குர்ஆன் அதே வடிவில் உருவாக்கிவிட முடியும். அந்த அளவிற்கு குர்ஆன் அல்லாஹ் குறிபிட்டது போல கல்வியாளர்களின் உள்ளங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

கேள்வி 3: விதியை மறுக்கிறதா மேற்க்கூறிய விளக்கம்:

இதற்கான பதில் விதியின்விதி என்ற எதிர் தொடரில் விளக்கியுள்ளோம்.







No comments:

Post a Comment