பக்கங்கள் செல்ல

Thursday, April 9, 2015

எதிர் தொடர் 3: "வழிபாடுகளில் கவனம் இல்லையா "- எதிர் தொடர்



எதிர் தொடர் 3: வழிபாடுகளில் கவனம் இல்லையா?
      இந்த தொடரில் அவர்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு நபியவர்கள் தொழுகையில் பொடும் போக்காக இருந்தார்கள் அல்லது அவர்களையும் சாத்தான் தொழுகையில் விட்டு வைக்க வில்லை என்று கூறவருகிறார். முதலில் சாத்தானால் நபியவர்கள் பிடிக்கப்பட்டவர் என்பதை கூறத்துவங்கியவர்கள் கிறித்தவர்களே. அவர்கள் இயேசு அவர்கள் அப்படி பட்டவர்கள் அல்ல என்பதை நிறுவ அவர்கள் எடுக்கும் மறைமுக ஆயுதம்தான் இது. இதை நாத்திகர்கள் தங்களது தளங்களில் பதிவு செய்திருந்தாலும் இந்த கட்டுரையின் உன்மையான ஆசிரியர் எந்த கொள்கையை சார்ந்தவர் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்வதற்கு இந்த எதிர்தொடர். [refer: Source Article ]

குற்றச்சாட்டு 1:

நமது பதில்:

       இந்த கட்டுரை ஆசிரியர் இந்த கட்டுரையின் ஆரம்ப பகுதியில் சில ஹதீஸ்களை பதிவு செய்துள்ளார் அதுவே இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கப் போதுமானது. முதலில் அவர் பதிவு செய்து இருக்கும் அறிவிப்பு இதோ.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்புக் கொடுக்கப்படும்போது, பாங்கு சப்தத்தைக் கேட்கக் கூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்றுப் பிரிந்தவனாக ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடிந்ததும் திரும்பி வருகிறான். தொழுகைக்கு இகாமத் கூறும் போதும் ஓடுகிறான். இகாமத் சொல்லி முடிந்ததும் முன்னோக்கி வந்து தொழுகையாளிக்கும் அவரின் மனதிற்குமிடையில் இருந்து கொண்டு தொழுகையாளி அவரின் மனதிற்குமிடையில் இருந்து கொண்டு தொழுகையாளி அதற்கு முன்பு வரை நினைத்திராத விஷயங்களையெல்லாம் அவருக்கு நினைவூட்டி, 'இதை நீ நினைத்துப் பார்; அதை நீ நினைத்துப் பார்,' என்று சொல்லிக் கொண்டு இருப்பான். தொழுகையாளி தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்று சந்தேகம் ஏற்படும் அளவிற்கு ஷைத்தான் அவ்வாறு செய்து கொண்டிருப்பான்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
                                                புஹாரி: 608.
       
      உன்மையில் தான் தேடியதாக கூறும் ஆசிரியர், குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் அபூதாவுத், இப்னு இஷாக் போன்ற நூல்களை தேடியவர் ஏனோ இது தொடர்பாக அரைகுறையாக தேடிவிட்டார் போலும். இதோ முஸ்லிமில் இடம் பெறும் ஒரு அறிவிப்பு.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்கான அறிவிப்புச் செய்யப்பட் டால் அதன் ஒலி தனக்குக் கேட்காமலிருப்பதற் காக ஷைத்தான் வாயு வெளியேறியவனாகத் திரும்பி ஓடுகிறான். தொழுகை அறிவிப்பு முடிந்துவிட்டால் அவன் திரும்பிவருகிறான். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் மீண்டும் ஓடிவிடுகிறான். இகாமத் சொல்லி முடியும்போது திரும்பிவந்து, (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதரின் உள்ளத்தில் ஊடுருவி "இதை இதையெல்லாம் நினைத்துப்பார்என்று கூறுகிறான்அவர் இதுவரை நினைத்துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டுகிறான்; (அதன் விளைவாக) அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை அறியாதவராகிவிடுகிறார். ( உங்களில் ஒருவருக்குத் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பது தெரியாவிட்டால் அவர் (தொழுகையின் இறுதியில்) அமர்வில் (மறதிக்குப் பரிகாரமாக) இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
                                                                                                நூல்: முஸ்லிம் 985
      இந்த ஹதிஸ் என்ன கூறுகிறது என்றால் தொழுகையில் குழப்பம் ஏற்பட்டதாக ஒருவர் தொழுதும்போது தோன்றினால் இறுதி அமர்வில் இரண்டு சஜ்தாக்கள் தொழுகையை முடிப்பதற்கு முன்பே செய்ய வேண்டும். இன்னும் தெளிவாக முஸ்லிமில் பதிவாகி இருக்கும் ஹதிஸை பார்ப்போம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருக்குத் தாம் மூன்று ரக்அத்கள் தொழுதோமா அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா என்று  தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகத்தைக் கைவிட்டுஉறுதியான (மூன்று ரக்அத்கள் என்ப)தன் அடிப்படையில் (மீதியுள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுதுவிட்டு சலாம்  கொடுப்பதற்கு முன் இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும். அவர் (உண்மையில்) ஐந்து ரக்அத்கள் தொழுது விட்டிருந்தால் (மறதிக்காகச் செய்த அவ்விரு சஜ்தாக்களால்) அவரது தொழுகையை அந்த (ஐந்து) ரக்அத்கள் இரட்டைப்படை ஆக்கி விடும். அவர் நான்கு ரக்அத்கள் பூர்த்தி செய்துவிட்டிருந்தால் அவ்விரு சஜ்தாக்களும் (தொழுகையில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக அமையும்.
                                                      முஸ்லிம் 990
                தொழுகையில் ஷைத்தானால் குழப்பம் ஏற்பட்டால் தொழுகையை முடிப்பதற்கு முன்பே சஜ்தா செய்ய வேண்டும். தொழுகையில் எதேனும் காரியத்தை மறதியினால் செய்யாமல் விட்டாலும் இதே பரிகாரம் தான். மேலும் இந்த ஹதிஸில் ஷைத்தானை வெற்றி கொள்வதற்கான முறையும் கூறப்படுகிறது. ஆக ஷைத்தானே நபி(ஸல்) அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அவர்கள் சஜ்தா செய்த்தின் மூலம் ஷைத்தான் முறியடிக்கப்பட்டதாகதான் கருதமுடியும்.

      இவர் பதிந்து இருக்கும் கூற்றின் படி நபி(ஸல்)  அவர்களுக்கு ஏற்ப்பட்டது ஷைத்தானால் ஏற்பட்ட குழப்பமா அல்லது மனிதனுக்கு ஏற்படும் மறதியா. அவர்பதியும் ஹதிஸை கீழே தருகிறேன் கவனமாக படியுங்கள்

அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு லுஹரையோ அஸரையோ தொழுதுவிட்டு சலாம் கொடுத்தார்கள். அப்போது துல்யதைன்(ரலி) ‘நபியவர்களே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா?’ எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களிடம் ‘இவர் கூறுவது உன்மையா? எனக் கேட்டபோது அவர்களும் ‘ஆம்’ என்று பதிளத்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் பிந்திய இரண்டு ரக்அத்களைத் தொழுகை நடத்திவிட்டு இரண்டு சஜ்தாக்களும் செய்தார்கள்.
                                    நூல் புஹாரி 1227
      உன்மையில் நபி(ஸல்) அவ்ரக்ளுக்கு சைத்தானால் குழப்பம் ஏற்ப்பட்டு இருந்தால் அவர்கள் தொழுது முடிப்பத்ற்கு முன்பே அதாவது சலாம் கொடுப்பதற்கு முன்பே சஜ்தா செய்து இருப்பார்கள் இல்லையா? ஆக நபி)சல்) அவர்களுக்கு ஏற்ப்பட்டது மனிதனுக்கு ஏற்படும் மறதிதானே ஒழிய வேறு இல்லை.

இதோ மற்ற ஒரு விளக்கும் ஹதிஸ்
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஐந்து ரக்அத்கள் தொழுவித்தார்கள்.  நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் (ரக்அத்) ஏதேனும் அதிகமாக்கப்பட்டுவிட்டதா?'' என்று கேட்டோம். அவர்கள், "என்ன அது?'' என்று கேட்டார்கள். மக்கள், "தாங்கள் ஐந்து ரக்அத் தொழுவித்தீர்கள்!'' என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நீங்கள் நினைப்பதைப் போன்று நானும் நினைக்கிறேன். நீங்கள் மறப்பதைப் போன்று நானும் மறக்கிறேன்'' என்று கூறிவிட்டுபிறகு  மறதிக்கான இரு சஜ்தாக்கள் செய்தார்கள்
                                    முஸ்லிம் 995
      முஹம்மது(சல்) அவர்கள் மறதியுள்ள, ஷைத்தானால் குழப்பத்திற்கு உள்ளாகும் மனிதர்களுக்கு தூதராக அனுப்பப்பட்டவர். ஆக மனிதனுக்கு இது போன்ற சிக்கல்கள் குறித்தும் அதை நிறைவு செய்வது குறித்தும் தூதரே விளக்க முடியும். ஆக அல்லாஹ் இப்படி ஒரு நிகழ்வை நிகழ்த்தி செயல் விளக்கப் பாடம் நடத்தியிருக்கிறான் என்று எந்த சராசரி முஸ்லிமுக்கும் தெரியும். அது ஏனொ இந்த “தேடும்” கட்டுரையாளருக்கு கண்ணில் பட வில்லை. ஒரு வேளை இஸ்லாத்தின் உண்மை மூலாதாரங்களில் தேடி இருந்தால் கிடைத்து இருக்கும். மேலும் இந்த கட்டுரையாளருக்கு மறதிக்கும் குழப்பத்திற்கும் வேறுபாடு தேரியவில்லை போலும். நிலையாக தொழும் முஸ்லிம் யாரும் இந்த சூழலை சந்திக்காமல் இருக்க மாட்டார். சில நேரங்களில் தொழும் போது நாம் எத்தனை ரக்அத்துகள் முடிந்து இருக்கிறோம் என்பதில் சந்தேகம் தோன்றும். அது ஷைத்தான் ஏற்படுத்தும் குழப்பம். சில நேரங்களில் முதல் ரக்அத்தையே இறுதி என்று உறுதியாக எண்ணிக் கொண்டு சலாம் கொடுத்தும் விடுவோம். பிறகு ஒருவர் சுட்டும் போது அதை அறிந்து கொள்வோம். இது தான் மறதிக்கும் குழப்பத்திற்கும் உள்ள வேறுபாடு.இரண்டு நோய்க்கும் ஒரே மருந்து என்பதால் இரண்டும் ஒரே நோயாக ஆகிவிடாது என்பது ஏனோ கட்டுரையாளருக்கு தெரியவில்லை. மேலும் மற்ற மதங்களை போன்று இறைவனுக்கு நிகராக இறைத்தூதரை என்றும் உயர்த்த மாட்டோம் என்பதை உறுதியான நிறுபனம் செய்ய இந்த கட்டுரை எனக்கொரு வாய்ப்பும் கூட. மேலும் தொழுகையில் கவனம் செலுத்தவேண்டுமா என்று குழம்பி விட்டாராம். என்னவென்று சொல்வது கவனம் செலுத்துவதில் எவ்வளவு பெரிய வித்தகராக இருந்தாலும் சரி மனிதனின் கவனம் சிதறக்கூடியது என்பதை இன்றைய உலகம் நிறுவிக்கொண்டு இருக்கும் நிலையில் இந்த கட்டுரையாளர் என்ன கூறவருகிறார்......இறைத்தூதர் என்பவர் மனித பலவீனங்களுக்கு கடவுளை போன்று அப்பார்பட்டவர் என்பதை சொல்லாமல் சொல்கிறார் இந்த கட்டுரையின் கதாசிரியர் கிறித்தவர்களைப்போல.......

குற்றச்சாட்டு 2: குழந்தையை சுமந்து தொழுதால் வழிபாடு பாலாகுமா?



நமது பதில்:
      அடுத்ததாக இவர் கூறும் குற்றச்சாட்டை ஆதரங்களினால் மறுப்பது இவர்  தொழுததே கிடையாது என்பதை நிறுபிக்க போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன். நபி(ஸல்) அவர்கள் தனது தோளில் குழந்தையை தூக்கிக் கொண்டு தொழுதால் அது குறை உடையது என்று கூறவருகிறார் கட்டுரை ஆசிரியர்

இவர் குறிப்பிடும் ஹதிஸின் மேல்விளக்கமாக கிழே இடம்பெரும் ஹதிஸ் உள்ளது
அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
      நபி (ஸல்) அவர்கள், -தம் புதல்வி ஸைனபுக்கும் அபுல்ஆஸ் பின் அர்ரபீஉக்கும் பிறந்த- (தம் பேத்தி) உமாமா பின்த்  ஸைனபைத் தமது தோளில் சுமந்துகொண்டு மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவித்ததை நான் பார்த்தேன். அவர்கள் ருகூஉக்குச் செல்லும் போது உமாமாவை இறக்கிவிட்டார்கள். சஜ்தா விலிருந்து எழும்போது மீண்டும் உமாமாவைத் தமது தோளில் அமர்த்திக்கொண்டார்கள்.                                                                                                  முஸ்லிம் 944
                இதே போன்று மற்றவர்கள் செய்ய கூடாது என்று கூறப்பட்டுள்ளதா? அல்லாஹ் எந்த நிலையிலும் தொழுகையை கடைபிடிக்க கூடியதாய் அமைத்து இருக்கிறான் என்பதற்கு அருமையான சான்று. குழந்தைகள் நன்றாக அமரும் காலத்தில் அவர்களை நம் தோளின் மீது அமர்த்திக்கொள்ளலாம். ருக்குவிற்கும் சஜ்தாவிற்கும் செல்லும் போது கீழே இறக்கி விட்டு விடலாம். ஏன்  நிற்கும் நிலையின் போது தோளில் அமர்த்தமுடியாத என்ன? தொழுகையின் நிலைகளையே அறியாத ஒருவர் போலும். எந்த காலத்திற்கும் எல்லோருக்கும் பொருந்தும் மார்க்கம் என்பதற்கு போதிய சான்று இது. மேலும் இதனால் குழந்தைகளும் தொழுகையை எளிமையாக கற்று கொள்ளும். அதற்கு என்று தனியாக சிறத்தை எடுக்க வேண்டிய அவசியம் இராது.

குற்றச்சாட்டு 3:இறைவன் நபி(ஸல்) அவர்கள்  மூலம் விதித்த கட்டளையை நபி(ஸல்) அவர்களே மீறினார்களா?
 




நமது பதில்:
அபூ சயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-ல்) தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னைக் கடந்துசென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் தொழு(து முடிக்கு)ம்வரை அவர்களிடம் செல்லவில்லை. பிறகு நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம், நீங்கள் ஏன் என்னிடம் உடனே வரவில்லை? அல்லாஹ், இறை நம்பிக்கை கொண்டவர்களே! இறைத்தூதர் உங்களை அழைக்கும் போது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரைந்து பதில் அளியுங்கள் என்று கூற வில்லையா? எனக் கேட்டார்கள்.பிறகு, நான் (பள்ளிவாச-லிருந்து) புறப்படுவதற்கு முன்பாக குர்ஆனில் மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நான் உங்களுக்குக் கற்பிக்கி றேன் என்று கூறினார்கள். பின்னர் நபி அவர்கள் (பள்ளிவாச-லிருந்து) வெளியேறப் போனார்கள். அப்போது நான் அவர்களுக்கு (அவர்கள் வாக்களித்ததை) நினைவூட்டினேன். நபி (ஸல்) அவர்கள், அது அல்ஹம்து -ல்லாஹி ரப்பில் ஆலமீன் எனும் (அல்ஃபாத்திஹா அத்தியா யத்தின்) திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள்தாம் என்று சொன்னார்கள்.
இதே ஹதீஸை நபித் தோழர் அபூசயீத் பின் முஅல்லா (ரலி) அவர்களிடமிருந்தே செவியுற்று வேறு அறிவிப்பாளர்களும் அறிவிக்கிறார்கள்.
                                                      புஹாரி 4647

நான் நிறமிட்டு காட்டியிருக்கும் பகுதி வரைதான் இந்த கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். ஆனால் அதன் பிற்பகுதி குறிப்பிட்ட குர் ஆன் ஆயத்தின் சாரத்தை விளக்கக்கூடியது. இஸ்லாமியர்கள் அன்றாடம் ஒவ்வொரு தொழுகையிலும் ஒவ்வொரு ரக் ஆயத்திலும் ஓதும் அல் ஃபாத்திஹா அத்தியாத்தின் சிறப்பை கூறுகிறது. மேலும் அப்படி ஒரு கட்டளை இடப்பட்டால் தான் தொழுகையில் ஏற்படும் மாற்றம் உட்பட அனைத்தையும் நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு உடனுக்கு உடன் தெரிவிக்க முடியும் மேலும் இந்த குர் ஆன் வசனம்(அல் குர் ஆன் 8:24) இறங்கிய பிறகே இந்த சம்பவம் நடைபெற்று இருப்பதால் நபி(சல்) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை மீறவில்லை என்பது தெளிவு. இந்த சம்பவதினால் அந்த குர் ஆன் வசனத்தின்(அல் குர் ஆன் 8:24) விளக்கத்தையும் நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள். மேலே நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடும் குர் ஆன் வசனம் எது என்பதை நாம் பதிவு செய்தால் நபி(ஸல்) அவர்கள் அந்த இறைவசனத்திற்கு செயல் வடிவம் கொடுத்துள்ளார்கள் என்பது தெளிவாக விளங்கும்.

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ يَحُولُ بَيْنَ الْمَرْءِ وَقَلْبِهِ وَأَنَّهُ إِلَيْهِ تُحْشَرُونَ (٢٤)

      நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும் உங்களுக்கு வாழ்வளிக்கும் காரியத்திற்கு இத்தூதர் உங்களை அழைக்கும் போதும் அவருக்கும் பதிலளியுங்கள்! ஒருமனிதனுக்கும் அவனது உள்ளத்திற்கும் இடையே அல்லாஹ் இருக்கிறான் என்பதையும் அவனிடமே ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்( அல் குர் ஆன் 8:24)
     
       ஆக இப்படி ஒரு ஹதிஸில் ஒரு பகுதியை மறைக்க மூல காரணம் என்ன என்பதை நான் சிந்தித்தவாறு என் வசிப்பை தொடர்தேன்................

குற்றச்சாட்டு 4: மனைவியை தொட்டால் உளு நீங்குமா?


நமது பதில்:
ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது:
      நபி(ஸல்) அவர்கள் தொழும் போது நபி(ஸல்) அவர்களை நோக்கி என் கால்களை நான் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் சஜ்தா செய்யும் போது என்னை விரலால் குத்துவார்கள். உடனே கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் எழுந்ததும் கால்களை நீட்டிக் கொள்வேன்.
                              நூல்: புஹாரி 1209

      இதில் இவருக்கு என்ன சிக்கல் தெரிகிறது என்று இஸ்லாமிய சகோதரர்கள் நினைப்பார்கள். அந்த அளவிற்கு இது குறித்து எந்த முஸ்லிமும் அறிந்து இருப்பார். நபி(ஸல்) அவர்களின் வீட்டின் அளவை விளக்க ஒவ்வோரு இமாமும் தங்களது உரைகளில் பயன்படுத்தும் ஒரு ஹதீஸ். நபி(ஸல்) அவர்களது வீட்டின் அளவு நான்கு நபரக்ளை அடக்கம் செய்யும் அளவுதான். இன்றும்  நபி(ஸல்) அவர்கள், அபூபக்கர்(ரலி) மற்றும் உமர்(ரலி) அவர்களின் அடக்கத்தளம் ஆயிஷா(ரலி) அவர்களின் வீட்டிலேயே அமைந்துள்ளது. அந்த இடத்திற்குள் இருவரும் வாழ்ந்து கொண்டு அங்கேயே உடைகளையும் பாத்திரங்களையும் வைத்து கொண்டும், உறங்கிக்கொண்டும் இருப்பது என்பது மிக சிரமமே. எப்படி ஆனாலும் சஜ்தா செய்வதற்கு சிரமமே

      மேலும் உபரியான தொழுகையான தஹஜ்ஜத் போன்ற தொழுகையை நபி(ஸல்) அவர்கள் வீட்டிலேயே தொழுவார்கள். தன்னுடைய கால்கள் வீங்கும் அளவிற்கு நின்று தொழக்குடியவராக இருந்துள்ளார்கள். ஆனால் பொது இடங்களில் தொழும் போது தடுப்பு அமைத்து தொழவேண்டும். அவ்வாறு அமைக்கப்பட்ட தடுப்பிற்கும் நாம் நிற்கும் இடத்திற்கும் உள்ள் தொலைவு நாம் சஜ்தா செய்யும் அளவு தான். அதற்கு இடையில் யாரும் செல்ல கூடாது என்பதைதான் அவர் குறிப்பிட்டு காட்டும் ஹதிஸ் காட்டுகிறது. போது இடங்களில் நாம் தொழும் தொழுகையானது நபி(ஸல்) அவர்களின் தொழுகை அளவிற்கு நீண்டும் இருக்காது. அப்படியே ஒருவர் தொழுதாலும் அவரின் பின் புறமாக அவர் சஜ்தா செய்யும் போது தாண்டி சென்று விடலாம். இதை பள்ளியில் தொழுத யாரும் அறிவார். இவ்வளவு வாய்ப்புக்கள் இருந்தும் ஒருவர் தொழுபவரின் குறுக்கே செல்வது என்பது சரியல்ல. இன்றும் இதை போன்ற ஏழ்மை நிலையில் உள்ள முஸ்லிமிற்கு இந்த சட்டம் பொருந்தும். இந்த கட்டுரையாளர் ஒரு இஸ்லாமியரே அல்ல என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை என்று நினைக்கிறேன்
சரி பெண்களின் மேல் கைபட்டால் உளு முறிந்து விடும் என்று யார் கூறியது. மத்ஹபில் சொல்லப்பட்டது எல்லாம் இஸ்லாம் ஆகாது என்று இவருக்கு தெரியவில்லை போலும்.

 

குற்றச்சாட்டு 5: ஒரே இரவில் மனைவியர் அனைவரிடமும் நபி(சல்) அவர்கள் செல்வார்களா?......... 

நமது பதில்:
      நபி(ஸல்) அவர்கள் இரவில் அல்லது பகலில் தங்களின் மனைவிமார்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் தங்கக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களின் மனைவிமார்கள் பதினோரு பேர் இருந்தார்கள் என அனஸ் பின் மாலிக்(ரலி) கூறியபோது நான் அவரிடம், அதற்கு நபி(ஸல்) அவர்களி சக்தி பெறுவார்களா?என்று நான் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்களுக்கு முப்பது பேர்களுடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது என நாங்கள் பேசிக் கொள்வோம் என அனஸ் (ரலி) கூறினார் என கதாதா கூறினார்கள்
                                          நூல்: புஹாரி 268
நான் மேலே சாயமிட்டு காட்டி இருப்பது அனஸ்(ரலி) அவர்களின் கருத்துதானே அன்றி இதை நபி(ஸல்) அவர்கள் கூற வில்லை என்பதே உன்மை. இதை நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவரான ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் பின் வரும் ஹதிஸை வாசிக்கும் யாரும் புரிந்து கொள்வார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
 என் சகோதரியின் மகனே! அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (மனைவியராகிய) எங்களிடையே நேரத்தை பங்கிடுவதில் எந்த ஏற்றத்தாழ்வும் கற்பிக்கமாட்டார்கள். எங்கள் அனைவரிடமும் நபி(ஸல்) அவர்கள் வராமல் இருப்பது மிகவும் அரிது.  எங்களிடம் வருவார்கள். அன்றைய முறை யாருடையதோ அந்த மனைவியரிடம் செல்லும் வரை யாருடனும் உறவு கொள்ளமாட்டார்கள்.  அவருடன் அன்றைய இரவை கழிப்பார்கள்...........
                              அறிவிப்பாளர்: உர்வா பின் ஜுபைர்
                              நூல்: அபூதாவூத் 2135

      மேலும் இவை போன்ற விஷயங்களில் மனைவிமார்களின் கூற்றே மிக சரியாக இருக்கும் என்பதை நான் தனியாக விளக்க வேண்டியது இல்லை என்று எண்ணுகிறேன்.

No comments:

Post a Comment