பக்கங்கள் செல்ல

Friday, April 10, 2015

ஒரு முஸ்லிம் பெண், பிராமின் விதவையின் கதை: உண்மை சம்பவம்!


14 வருடங்களுக்கு முன்னால் , தான்   உயிரோடு இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்ற முடிவுக்கு வந்த ஒரு பிராமின் வயதான விதவை, இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது, ஒரு முஸ்லிம் பெண் அவரை தடுத்து நிறுத்தினார்.

இந்த 34 வயதுடைய முஸ்லிம் பெண்  பீவி, கேரளாவில்   தன் கணவரோடு வசிக்கும்,  3 குழந்தைகளுக்கு தாயான. ஒரு குடும்பத்தலைவி. இவர் அந்த 76 வயதுடைய பிராமின் நம்பூத்ரி பெண்ணை தன வீட்டிற்கு அழைத்துச்சென்று தங்கவைத்துக்கொண்டார்.  மத & கலாச்சார வேறுபாடுகள் இருந்தபோதும், அந்த பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்து, புது உறவுகள் ஏற்படுத்தி கொடுத்தார்.    


பீவி, அவர் பூஜை செய்வதற்கு தேவையான குத்து விளக்கு மற்றும் அனைத்து பொருள்களையும் வாங்கிக்கொடுத்து, தன வீட்டிலேயே அவர் பிரார்த்தனை செய்ய அனுமதி அளித்தார்.

2004ம் வருடம், அரசின்       "வீடில்லாதவருக்கு வீடு அளிக்கும் திட்டம்" மூலம் 55,000 ருபாய் வாங்கி, மேலும் தான் சேமித்து வைத்திருந்த பணத்தையும் சேர்த்து, இரண்டு அறை உடைய ஒரு வீட்டை அவருக்காக கட்டிக்கொடுத்தார்,  பீவி.

அவர் நல்ல உடல் நிலையோடு இருக்கும் பொது, அவரை கோவிலுக்கு அழைத்துச்சென்று, அவர் பிரார்தனை முடிந்து வரும் வரை வெளியில் அமர்ந்து  இருப்பேன், மேலும் நாங்கள் ஒற்றுமையாக வாழ்வோம், எங்களில் ஒருவர் இந்த உலகை விட்டு பிரியும் வரை, என்கிறார் பீவி.

இன, மத வெறி பிடித்து, அலையும் கூட்டத்திற்கு, இவர்களின் செயல் சரியான சவுக்கடியாக உள்ளது.

திருக்குர்ஆன் சொல்கின்றது:
அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்பவரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். [4:36]

 "ஒரு மனிதனை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்"  [5:36]


(சுருக்கமான, ஒரு சிறிய பகுதியின் மொழியாக்கம் - முழுமையான ஆங்கில பதிவு  இங்கே உள்ளது)

[ Thanks: Indian Express & யாதும்ஊரேயாவரும்கேளிர் அன்பேஎம்உலகதத்துவம்]

No comments:

Post a Comment