பக்கங்கள் செல்ல

Sunday, April 19, 2015

முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையிடும் நீதிமன்றங்கள்!

விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் குற்றவி யல் நடைமுறைச் சட்டம் சி.ஆர்.பி.சி. பிரிவு 125ன்படி ஆணிடமிருந்து ஜீவானம்சம் பெற முழு உரிமை உள்ளது. இதில் எந்த விதி விலக்கும் கிடையாது என கடந்த 7ம் தேதி தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
சி.ஆர்.பி.சி. 125 பிரிவு பெண்க ளுக்கான ஜீவானம்ச உரிமையை உள்ளடக்கியிருப்பதால் சட்டம் விவாகரத்து செய்யப்பட்ட முஸ் லிம் பெண்களுக்கும் பொருந்தும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள் ளது உச்ச நீதிமன்றம்.
"கணவர் ஆரோக்கியமாக இருந் தால், உடல் திறனோடு இருந் தால் தன்னைத்தானே பராமரித் துக் கொள்ளும் நல்ல நிலையில் இருந்தால் மனைவிக்கு ஆதரவ ளிக்கும் பொறுப்பும் அந்த கணவ னுக்கு இருக்கிறது."
அதே சமயம், பராமரிப்புத் தொகையை பெறும் உரிமை தகுதியிழப்பை அடை யும்வரை மனைவிக்கு அந்தத் தொகையைப் பெற முழு உரிமை இருக்கிறது என்றும் கூறியுள்ளார் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான தீபக் மிஷ்ரா மற்றும் பி.சி. பாண்ட் அடங்கிய பெஞ்ச்,
இந்த சி.ஆர்.பி.சி. 125ன்படி விவாகரத்தான முஸ்லிம் பெண்க ளுக்கு அப்பெண் மறுமணம் செய்யாதிருக்கும்வரை எக்கார ணத்தை கொண்டும் ஜீவானம்சம் பெறும் உரிமை தடுக்கப்படக் கூடாது.
இந்த சட்டத்தின்படி வழங்கப்படும் (ஜீவானம்சம் என்கிற) பராமரிப்புத் தொகை முஸ்லிம் பெண்ணின் இத்தா (விவாகரத்திற்குப் பின் 3 மாத காத்திருப்பு காலம் அதாவது, இந்த காத்திருப்பு காலத்திற்கு முன் அப்பெண் மறுமணம் செய்து கொள்ள முடியாது) காலம்வரைதான் வழங்கப்பட முடியும் என்று சுருக்கிக் கொள் ளக் கூடாது என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் விளக்கமளித் துள்ளனர்.
இதற்கு முந்தைய அரசியல மைப்புச் சட்ட அமர்வின் தீர்ப்பை இந்த நீதிபதிகள் சுட்டிக் காட்டி இதனை தெளிவுபடுத்தி யுள்ளனர்.
இந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் கொடுத்திருக்கும் விளக்கம், ஷாபானு வழக்கில் உச்ச நீதிமன் றம் கொடுத்த தீர்ப்பையடுத்து எழுந்த பெரும் விவாதங்களுக் குப் பின் அப்போதைய ராஜீவ் காந்தி அரசு பாராளு மன்றத்தில் நிறைவேற்றிய சட்டத்தின் மூலம் பராமரிப்பு தொகையை பெறும் உரிமை குறைக்கப்பட்டு விட்ட முஸ்லிம் பெண்களுக்கு இந்த தீர்ப்பு உதவிகரமாக இருக்கும் என்றும் கூறியுள்ள உச்ச நீதி மன்ற நீதிபதிகள்,
ஒருவர் எல்லா வசதியிருந்தும் மனைவிக்கு ஜீவானம்சம் தருவ தற்கு மறுத்தாலோ, புறக்கணித் தாலோ சி.ஆர்.பி.சி. 125ன் கீழ் உத்தரவு நிறைவேற்றப்படும் என் பதில் சந்தேகத்தின் நிழல் கூட இருக்க முடியாது என உறுதிபட தீர்ப்பில் கூறியுள்ளனர்.
குடும்ப நீதிமன்றங்கள் கடந்த ஆண்டுகளாகவே விவாகரத்தான முஸ்லிம் பெண்களுக்கு நிவார ணத் தொகை கொடுப்பதில் கூட இந்த (சி.ஆர்.பி.சி. 125) சட்டத்தின் கடுமையைக் குறைத்து விட்டன. எந்த தனியார் சட்டங்களின் மீதும் இந்த நாட்டின் சிவில் சட்டங்கள் மிகைக்கும் வகையில் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் பிரச்சி னைகளைத் தீர்க்கின்றன என்றும் நீதிபதிகள் கூறியிருக்கின்றனர்.
சில வேளை, கணவன்மார்களால் ஜீவானம்சம் தரும் அள விற்கு வசதி இல்லை; வேலை இல்லை; வியாபாரம் சரியில்லை என்றெல்லாம் முன்கூட்டியே வழக்கு தொடுப்பதுண்டு. இவை யெல்லாம் மொட்டைக் காரணங் கள்.
லக்னோவைச் சேர்ந்த ஷமீமா ஃபரூக்கி, தனது கணவர் ஷாஹித் கானால் கடுமையாக நடத்தப்பட் டார். ஷாஹித் பின்னர் மறும ணம் செய்து கொண்டார்.
1988ல் ஷமீமா தாக்கல் செய்த மனு 2012ல் விசாரணைக்கு எடுத் துக் கொள்ளப்பட்டது. ஷாஹித் கான் இராணுவத்தில் மாதம் 17654 ரூபாய் சம்பளம் பெற்று வந்தார். சலுகைகள் உட்பட!

குடும்ப நீதிமன்றம் முதலில் கான் ஷமீமாவிற்கு முதற்கட்ட மாக மாதம் 2000 ரூபாய் தர வேண்டும் என உத்தரவிட்டது. பின்னர் ஷமீமாவிற்கு வருமானத் திற்கு வேறு வழியில்லை என அறிந்து மாதம் 4000 ரூபாய் தரச் சொன்னது.

இருப்பினும் லக்னோ உயர் நீதிமன்றம், ஷாஹித் கான் 2012ல் ரிட்டையர்டு ஆகி விட்டதை அறிந்து மாதம் 2000 ரூபாயாக அந்த பராமரிப்பு தொகையை குறைத்தது. இது உச்ச நீதிமன்றத் தின் கோபத்திற்கு வழி வகுத்தது.

ஆனால் இன்றைய உலகில், மாதம் 2000 ரூபாய்க்குள் தன்னை நிர்வகித்துக் கொள்ளும் நிலை யில் ஒரு பெண் இருக்க வேண்டும் என்பது மிகவும் கடினமானது.

ஆனால், 125வது பிரிவில் இருக்கும் உள்ளார்ந்த மற்றும் அடிப்படை கொள்கைகள் இது போன்ற விவகாரங்களில் பொரு ளாதார நிலையை சீர்திருத்துவ தாகவே உள்ளது என்றும் உதார ணம் காட்டி அனைத்து பெண் கள் மீதும் சி.ஆர்.பி.சி. 125 பிரிவு பொருந்தும் என்று கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்.

ஆக, முஸ்லிம் தனியார் சட் டம் இருந்தாலும், ஜீவானம்ச வழக்கில் சி.ஆர்.பி.சி. 125வது சட்டம் அவற்றை செல்லுபடியா காததாக்கும் என்பதுதான் உச்ச நீதிமன்றம் சொல்ல வரும் செய்தி.
அதே சமயம், கடந்த மார்ச் 8ம் தேதி அன்று மும்பை குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய ஜீவானம் சம் குறித்த தீர்ப்பில் தகுதியுடைய பெண்கள் கணவனிடமிருந்து ஜீவானம்சம் கோர முடியாது என சுட்டிக் காட்டியுள்ளது.
கடந்த 2013ல் தாக்கல் செய்யப் பட்ட இந்த வழக்கு தொடர்பான மனுவில் சம்மந்தப்பட்ட பெண், தனது மண வாழ்க்கை முழுவதி லும் வரதட்சணை கொண்டு வரச் சொல்லி தனது கணவனும் அவ ரது குடும்பத்தினரும் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியா கவும் துன்புறுத்தியதாகவும், தன் பெற்றோரிடமிருந்து 50 லட்சம் ரொக்கம் தங்க நகை, சொகுசு கார் போன்றவற்றை வாங்கி வரச் சொல்லி நிர்பந்தித்ததாகவும், இதன் காரணமாக ஏப்ரல் 2011 முதல் தான் தனியாக வாழ நிர்ப் பந்திக்கப்பட்டு தன் பெற்றோரு டன் வாழ்ந்து வருவதாகவும், தனக்கு எவ்வித வருமானமும் இல்லாததால் பெற்றோரை சார்ந் திருக்கும் நிலையில் இருப்பதா வும் கூறியிருந்தார்.

தனது கணவன் துபாயில் வியாபார நிறுவனம் நடத்தி, மாதம் 15 லட்சம் ரூபாய் சம்பா திப்பதாகவும் அதில் கூறியிருந்த அப்பெண் ஜீவனாம்சம் கோரியி ருந்தார்.

அதே சமயம், கடந்த மார்ச் 8ம் தேதி அன்று மும்பை குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய ஜீவனாம்சம் குறித்த இந்த வழக்கின் தீர்ப்பில் தகுதியுடைய பெண்கள் கணவனி டமிருந்து ஜீவனாம்சம் கோர முடியாது என தெரிவித்துள்ளது.
இவரது கணவரோ, அந்தப் பெண் சட்ட ரீதியாக தனது மனைவி இல்லை. அதனால் அவர் பராமரிப்புத் தொகை பெறத் தகுதியற்றவர் என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இருவருக்குமிடையிலான திரு மண பந்தம் செப்டம்பர் 7, 2014ல் தலாக் மூலம் முடிவுக்கு வந்திருக்கி றது. இரண்டாவதாக, அப்பெண் போதுமான வசதியுடன் இருப்ப வர். நல்ல அனுபவம் மற்றும் வரு மானமும் கொண்டவர் அப்பெண். குறைந்தபட்சம் மாதம் ரூ. 50 ஆயி ரம் சம்பாதிக்கிறார். அதனால் பரா மரிப்புத் தொகை பெற அவருக்கு உரிமை இல்லை என கணவரின் தரப்பில் வாதிக்கப்பட்டது.

கணவரின் முதல் வாதத்தை மறுத்த நீதிமன்றம், விவாகரத்து பெற்று விட்ட ஒரு முஸ்லிம் பெண் அவள் மறுமணம் செய்து கொள்ளும்வரை பராமரிப்புத் தொகை பெறத் தகுதியுடையவள் ஆவாள்.

இதுபோன்ற சந்தர்ப்பத்தில் இருவருக்குமிடையில் தலாக் ஆகி விட்டது என்று பிரதிவாதி (கண வர்) தரப்பு சொல்வது, மனுதார ரின் (மனைவி) பராமரிப்பு தொகை கோரும் உரிமையை எவ் வகையில் பாதிக்காது...'' என்று கூறிய நீதிமன்றம்,

ஆயினும், மனுதாரர் பட்டப் படிப்பை முடித்து உணவு மற்றும் ஊட்டச்சத்து அறிவியலில் முதுநி லைப் பட்டம் பெற்றவர் என்பதை தனது மனுவில் ஒப்புக் கொண்டி ருக்கிறார். முன்னணி நிறுவனங்க ளில் பணியாற்றியிருக்கிறார். தற் போது வேலைக்கு செல்லாமல் இருக்கிறார். இவை மனுதாரர் தகுதியான நிலையில் இருக்கிறார்; பணியாற்றும் திறனோடு இருக்கி றார் என்பதை நிரூபிக்கின்றன.
ஒரு பெண் தகுதியான நிலை யில் இருந்து கொண்டு, வீட்டில் பயனற்றவகையில் அமர்ந்து கொண்டு பராமரிப்பு தொகை பெற உரிமையில்லை. அந்தப் பெண் தன் சொந்த தவறை பயன்ப டுத்தி தனக்கு சாதகமாக்கிக் கொள்ள உரிமையில்லை.
சம்பாதிக்கின்ற தகுதியிருக்கும் நிலையில் பராமரிப்புத் தொகை கேட்டு கணவனை தொல்லைக் குட்படுத்தக் கூடாது என்று கூறி மாதம் 2 லட்சம் ரூபாய் ஜீவானம் சம் வேண்டும் என கோரிய அப் பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்தது மும்பை குடும்ப நல நீதிமன்றம். 

இப்படி நீதிபதிகள் பல்வேறு வகையான தீர்ப்புகளை வழங்கி தாங்களும் குழம்பி, முஸ்லிம் சமு தாயத்தையும் குழப்பி வருகின்ற னர்.
இந்த குழப்பத்திற்கு காரணம் ராஜீவ் காந்தி அரசு இயற்றிய முஸ்லிம் பெண்கள் (விவாகரத்து உரிமை பாதுகாப்புச்) சட்டம் 1986ன்படி தீர்ப்பு வழங்காமல் சி.ஆர்.பி.சி. 125ன்படி தீர்ப்பு வழங் குவதால்தான்.

முஸ்லிம் பெண்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்ட பின்பும் அதற்கு மாற்றமான தீர்ப் புகளை வழங்குவதை இந்தியா வில் பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்ட பின்னணி யாகவே பார்க்க வேண்டியுள்ளது.
-அபு பைஸல்

No comments:

Post a Comment