பக்கங்கள் செல்ல

Wednesday, April 29, 2015

"பாரதத்தில் இஸ்லாமும்-பசுக்கொலையும்"- இஸ்லாம், உணவுக்காக பசுவை கொல்வதை தடைசெய்கின்றதா?

"பாரதத்தில் இஸ்லாமும்-பசுக்கொலையும்", என்ற தலைப்பில் முகநூளில் வந்த பதிவிற்கு, பதில்.

இதை பார்க்கும் எந்த ஒரு முஸ்லிமுக்கும்,  இது  இஸ்லாம் சொன்னது அல்ல என்று தெரிந்துவிடும். மாற்று
மத சகோதரர்களுக்கு தெளிவாக்க வேண்டும் என்ற காரணத்தினால் இதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.


இஸ்லாம் என்று எதையேனும் கொண்டுவந்தால், அது இந்த இரண்டு மட்டுமே:

1. திருக்குரானில் இடம்பெற்று இருக்கவேண்டும்
2. ஆதாரபூர்வமான நபிவழியாக இருக்கவேண்டும் 

இது அல்லாமல், யார் என்ன சொன்னாலும், அவர் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் எடுபடாது. இதை மனதில் படிய வைத்துக்கொள்ளுங்கள்.
மற்ற மதங்கள் போல் கலப்படம் செய்ய முடியாமல் போனதற்கு மேலே சொன்ன அடிப்படை அளவுகோல்கள் தான் காரணம். உலகம் அழியும் வரை எவராலும் இதை மாற்ற முடியாத அளவிற்கு இருப்பதால் தான் இஸ்லாம் தனித்து நிற்கின்றது.

//• அரபு தேசங்களை இஸ்லாமின் கீழ் ஒரே ஆட்சிக்கு அடிகோலிய ஹசரத் முகம்மது அவர்கள், “பசுவின் பால் ஒரு மருந்து; அதன் நெய் அமிர்தம்; அதன் மாமிசம் ஒரு நோய்”// 


மேலே சொல்லப்பட்ட ஹதீத், " முலய்காஹ் பின்த் உமர்"   என்பவரின் மூலமாக அறிவிக்கப்பட்டதாக அல்-பாகவி  என்ற புத்தகத்திலும், இப்னு மசூத் அவர்கள் மூலமாக அறிவிக்கப்பட்டதாக (Mustadrak al-Hakim) முஷ்ததர்க் அல்-ஹகீம் என்ற புத்தகத்திலும் இடம்பெற்றத்தாக ஷேய்க் ரியாத் அல்-,முசைமிரி அறிவிக்கின்றார்கள். இது ஒரு இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஹதீத் என்பது பெரும்பான்மையான அறிஞ்சர்களின் கருத்து. மேலும் இன்னும் பல ஆதாரபூர்வமான ஹதீத்கள் இதை மறுக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

எதை உண்ணக்கூடாது?
 நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மை யானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின்,  அவனுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.
  •  (தானாகச்) செத்த பிராணி, 
  •   உதிரம், 
  •   பன்றியிறைச்சி, 
  •   அல்லாஹ் அல்லாதவருக்காக அறுக்கப்பட்ட பிராணி 
ஆகியவற்றையே உங்களுக்கு அல்லாஹ் தடைசெய்துள்ளான். ஆயினும், எவரேனும் விருப்பமில்லாமலும் வரம்பு மீறாமலும் (உண்ண) நிர்ப்பந்திக்கப் பட்டால், அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை. (2:172, 173) 
"... ஆனால், உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமை யினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (விலக்கப் பட்டவற்றைப் புசித்து)விட்டால் (அது குற்றமாகாது)" (5:3). 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விலங்குகளில் கோரைப்பற்கள் உள்ள ஒவ்வொன்றையும், பறவைகளில் கோரை நகங்கள் உள்ள ஒவ்வொன்றையும் (உண்ணக் கூடாதெனத்) தடை செய்தார்கள். (புஹாரி  3914).


நபி (ஸல்) அவர்கள் மாட்டை குர்பானி கொடுத்தார்கள்:

"...இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , தம் துணைவியருக்காக மாடுகளை அறுத்துக் குர்பானி கொடுத்தார்கள்' ...." (புஹாரி  5559).
இதிலிருந்து இஸ்லாத்தில் மாட்டிறைச்சியை தடை செய்யப்பட வில்லை என்று தெளிவாக தெரிகிண்றது.


பிற  உயிரினங்களிடம் கருணை காட்டுதல்::

இஸ்லாம் எந்த நிலையிலும், எந்த ஒரு உயிரினத்தையும் துன்புறுத்தக்கூடாது என்றும், உணவுக்காக கொல்ல நேரும்போது கூட, கடுமையான  வழிமுறைகளை வைத்துள்ளது .

"'ஒரு நாய் தாகத்தின் காரணமாக ஈர மண்ணை (நக்கி) சாப்பிடுவதை ஒருவர் பார்த்தார். உடனே அவர், தான் அணிந்திருந்த காலுறையை எடுத்து அதில் தண்ணீர் மொண்டு அந்நாய் தாகம் தீரும் வரை கொடுத்தார். எனவே அல்லாஹ் அம்மனிதருக்கு கருணை காட்டி அவரைச் சுவர்க்கத்தில் புகத்தினான்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்று என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புஹாரி 174)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஒரு பூனையை, அது சாகும்வரை சிறைவைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்துவைத்தபோது, அவள் அதற்கு உண்பதற்கும் கொடுக்கவில்லை; பருகுவதற்கும் கொடுக்கவில்லை;பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அதை அவிழ்த்து) விடவுமில்லை. அதனால் அவள் நரகத்தில் நுழைந்தாள். ((புஹாரி 4514)

நான் இரண்டு விஷயங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து மனனமிட்டுள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எல்லாவற்றிலும் எளிய முறையை விதியாக்கியுள்ளான். எனவே,கொல்லும்போதும் எளிய முறையில் கொல்லுங்கள். அறுக்கும்போதும் எளிய முறையில் அறுங்கள். உங்களில் ஒருவர் அறுப்பதற்கு முன் கத்தியைத் தீட்டிக்கொள்ளட்டும். அறுக்கப்படும் பிராணியை ஆசுவாசப்படுத்தட்டும். (புஹாரி 3955)




No comments:

Post a Comment