பக்கங்கள் செல்ல

Thursday, April 9, 2015

ISLAM VS INTERSTELLAR


சில நாள் முன்னர் ஒரு திரைப்படம் பார்த்தேன். அது தொடர்பாக நண்பர் ஒருவர் எழுதிய கட்டுரை ஒன்றிணையும் வாசித்தேன் சில சுவாரஸ்யமான விடயங்களை குறிப்பிட்டடு ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதை இன்று படித்தேன் உங்களிடமும் பகிர்கின்றேன். நபி (ஸல்) அவர்களின் விண்ணுலக யாத்திரையை அறிவியல் ரீதியாக நிருபிக்க முடியும் என்பதை இன்றைய விஞ்ஞானம் உணர்த்துவதை அறிந்து கொண்டேன். 

ரிச்சர்ட் டாவ்கின்ஸ் அல்-ஜஸீரா வில் ஒரு நேர்காணலில் பேட்டி  காண்பவரை நோக்கி "நீங்கள் முஹம்மது நபி ஒரு இரவில் விண்ணுலகம் சென்று வந்ததை நம்புகிறீர்களா " என்று கேட்கிறார். அதற்க்கு அந்த நபர் "ஆம்" என்கிறார்.
"Come on" இது 21 ஆம் நூற்றாண்டு  இன்னுமா இதை நம்ப முடிகிறது என்று கேலி செய்கிறார்.

இது போன்ற எத்துணையோ பகுத்தறிவாளிகள் ? இந்த 21 ஆம் நூற்றாண்டிலா இதை நம்புகிறீர்கள்என்று நம்மை திருப்பி கேட்டிருக்க கூடும்.இவர்கள் அனைவருக்கும் எனது பதில் இதுவாக தான் இருக்கும்.
"ஆம் 21 ஆம் நூற்றாண்டில் தான் இதை இன்னும் புரிந்து நம்ப முடிகிறது " நாம் விஞ்ஞானத்தில் வளர்ச்சி அடைந்தது நமக்கு இன்னும் நமது நம்பிக்கையை பல படுத்தவே செய்கிறது.

1400 வருடங்களுக்குமுன்னர்,
ஒரு இரவு வேளையில் முஹம்மத் நபியின் உயிரை இறைவன் கைப்பற்றி அவரை உயர்ந்த தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்து சென்றதாக கூறுகிறது  இஸ்லாம்.

17:1. (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து  மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; அதன் சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறுஅழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.

அங்கே அவருக்கு பல காட்சிகள் எடுத்து காட்டபடுகிறது. சொர்க்கம் செல்லும் மக்களின் தொகையும், நரகம் செல்லும் மக்களின் கூட்டமும் அவருக்கு தெரிகிறது. பிலால் என்ற அவரது தோழரின் செருப்பு ஓசை சொர்க்கத்தில் கேட்கிறது. இன்னும் அவர் தனக்கு முன்பு இந்த பூமிக்கு அனுப்பப்பட்டு இறந்து போன அனைத்து நபிமார்களையும் காண்கிறார்.

இது ஒரு கட்டு கதையென முஹம்மது நபியை ஏற்று கொள்ளாத மக்களுக்கு தோன்றியது. இப்போதும் இதை நம்ப முடியவில்லை என்று சொல்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இது நடந்திருக்குமா ? என்று குறைந்த பட்சம் சாத்தியமாவது இருக்குமா என்று கேட்பவர்களுக்கு இனி,

நாம் காலம் என்ற பரிணாமத்திற்குள் வாழ்கிறோம். நமது பூமி அதிலுள்ள படைப்புகள் அனைத்தும் இந்த காலத்திற்குள் தான் சுழன்று கொண்டிருக்கிறோம். காலத்தை கடந்து போவது என்பது கற்பனைக்கு  கூட எட்டாத விசயமாக தான் இருந்தது கடந்த நூற்றாண்டுகளில்.

"ஒளியின் வேகத்தை மிஞ்சி நாம் பயணித்தால் காலத்தை நம்மால் கடக்க முடியும்" என்று ஒரு விஞ்ஞானி விஞ்ஞான கணக்கின் படி நிரூபித்து காட்டியதும் உலகம் அந்தர் பல்ட்டி அடித்தது. பகுத்தறிவாளர்கள் எல்லாம் தங்கள் பேச்சை அப்படியே மாற்றி பேச தொடங்கினர். அவர்களுக்கு அன்பு தான் சிவம் நமக்கு சிவம் தான் அன்பு என்பதை போன்று அவர்களுக்கு சயின்ஸ் தான் தெய்வம். நமக்கோ தெய்வம் சொல்வதும் சயின்ஸ்.

வேகம் அதிகரிக்க அதிகரிக்க காலம் சுருங்கி விடுகிறது என்பது தான் அந்த தியரி. இதை சொன்னவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின்.
ஒருவர் தனது 10 வயதில் ஒலியின் வேகத்தில் விண்ணில் பயணம் செய்தால் அவர் 5 வருட பயணத்திற்கு பின்னர் பூமிக்கு திரும்பும் போது அவரது நண்பர்களுக்கு 60 வயது இருக்கும். காலம் சுருங்கியதே இதற்க்கு காரணம்.

இனி Interstellar கதைக்கு வருவோம்,
மிக சுருங்க சொன்னால் ஒரு மனிதன் வின் பயணத்தின் போது black hole என்ற அதீத புவியீர்ப்பு சக்த்தியை கொண்டு  மறுபுறம் நுழைய முயர்ச்சிக்கையில் அதன் சுழற்ச்சியில் மாட்டி காலத்தை கடந்து வேறு ஒரு உலகத்திற்கு சென்று விடுகிறான். அது இந்த உலகத்தை போன்றதல்ல.
உலகத்தில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் ஒரு திரைக்கு பின்னால் இருப்பதை போன்று காலம் என்ற பரிணாமத்தை கொண்டு பின்னப்ப்பட்டிருக்கிறது. எதிர் காலம்,நிகழ காலம் என்று பயணித்து சம்பவங்களை ஒரு திரைக்கு பின்னால் இருந்து பார்க்கும் அளவிற்கு அந்த இடம் விசித்திரமாக இருக்கிறது. அங்கிருந்து கொண்டு தனது மகளுக்கு செய்தி அனுப்ப முயற்சிக்கிறான். இது தான் அந்த கதை.

இது கதை என்றாலும் நிஜத்தில் சாத்தியம் உண்டா என்றால் உண்டு என்கிறது விஞ்ஞானம். Interstellar சொல்லும் கதையின் கருவை தான் இஸ்லாம் சொல்ல முயற்ச்சிக்கிறது. அது எத்துனை பகுத்தறிவு மரமண்டைகளுக்கு தெரியும் என்பது தெரியாது.

ஒவ்வொருவரும் மரணித்த பின் பர்சக் என்ற திரைக்கு அப்பால் உள்ள உலகத்த்திர்க்கு பயணிக்கிறார்கள் என்கிறது குரான்.

23:99. அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான்.

23:100. “நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.

அங்கே அவர்கள் மீண்டும் நியாய தீர்ப்பு நாளுக்காக எழுப்பப்படும் வரை தூங்கி கொண்டிருப்பார்கள் என்கிறது இஸ்லாம். தீர்ப்பு நாளின் போது அந்த உயிர்கள் எழுப்பப்படும் போது ஒவ்வொரு உயிரும் கேட்பது "என்னை இந்த இடத்தில் இருந்து எழுப்பியவன் யார்"என்பதோடு மட்டுமில்லாமல் தான் எத்துனை ஆண்டுகள் தூங்கினோம் என்று கூட அவனுக்கு தெரியாது. நேற்று தூங்கினேன் என்றும், இப்போது தான் தூங்கினேன் என்று பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இறந்து போனவர்கள் கூட சொல்வார்கள்.

இது தவிர நமது தூக்கத்தில் கூடநம்மை இயக்கம் ஒரு வித சிந்தனை உ யிரை இறைவன் கைப்பற்றி கொள்கிறான் என்று குரான் கூறுகிறது. தூக்கத்திலும் நமக்கு நேரம் போவது வேகமாக இறக்க காரணம் இது தான். உங்கள் மூளை ஒரு சிறு கனவை கண்டு முடிப்பதற்குள் ஒரு பெரும் இரவையே கடந்திருப்பீர்கள்.

 அதுபோலவே தான் இறந்த உயிர்கள் தூங்கி கொண்டிருக்கும் உலகத்தில் காலம் என்ற பரிணாமம் வேறு. அங்கே சில நிமிடங்கள் என்பது இங்கே பல வருடங்கள்.இன்னும் சில திரைக்கு அப்பாலுள்ள உலகத்தில் சில வருடங்கள் என்பது இங்கே சில நிமிடங்கள் என்று கூட இருக்கலாம். இந்த உலகத்தை தாண்டி விண்ணுலகம் சென்று விட்டால் அங்கே ஒவ்வொன்றும் ஒவ்வொரு கால பரிணாமத்தில் இயங்கி கொண்டிருக்கும்.

முஹம்மது நபியை இறைவன் அழைத்து சென்றது சொர்க்கம், நரகம் இவை அனைத்தும் காட்டுவதற்கு. அவர் அங்கே செல்லவிருக்கும் அனைவரையும் காணவும்  செய்கிறார்.

இங்கே நாம் மேலும்  இரண்டு விசயங்களை புரிந்து கொள்ள முடிகிறது. ஒருவர்
எதிர் காலத்தை அடைய வேகமாக பயணித்தல் முடியும் என்கிறது விஞ்ஞானம். ஆனால் கடந்த காலத்தை மட்டும் கடக்க முடியாது அதற்க்கு விஞ்ஞானத்திடம் பதில் இல்லை. எப்போதும் Past is  Past
எதிர் காலத்தில் நடப்பதை பார்க்க வேண்டும் என்று சொன்னால் அந்த எதிர் காலமும் முன்னரே விதியின் படி இன்னது இன்னது என்று தீர்மானிக்க பட்டிருக்க  வேண்டும்.
எனவே விதியையும் விஞ்ஞானம் ஒத்து கொண்டாக வேண்டியுள்ளது.

Credits: Muhamed Nousath

No comments:

Post a Comment