பக்கங்கள் செல்ல

Friday, May 8, 2015

எதிர்தொடர் 13: குர்ஆனும் ஹதீஸும்

அல்லாஹ்வின் திருப்பெயரால்.....

          இந்த தொடரில் நாம் கட்டுரையாளரின் வாதங்களுக்கு மறுப்பு கூறும் முன் அல்லாஹ்வின் வேதம் மற்றும் நபி(சல்) அவர்களது சுன்னாஹ் ஆகியவற்றை குறித்து ஒரு சிறிய அறிமுகத்தை பார்ப்போம். அல்லாஹ் நபி(சல்) அவர்களுக்கு தனது வகீயின் மூலம் சிறிது சிறிதாக 23 ஆண்டுகாலம் இந்த திருகுர்ஆனை இறக்கியருளியுள்ளான். அதை சிறிது சிறிதாக இறக்கியதற்கான காரணத்தை அல்லாஹ் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்.
மக்களின் உள்ளத்தை உறுதிபடுத்த:

 وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَوْلا نُزِّلَ عَلَيْهِ الْقُرْآنُ جُمْلَةً وَاحِدَةً كَذَلِكَ لِنُثَبِّتَ بِهِ فُؤَادَكَ وَرَتَّلْنَاهُ تَرْتِيلا (٣٢)

      இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக அருளப்படக் கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே!) இப்படித்தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம்.( அல் குர்ஆன் 25:32. )

            மேலே நான் சாயமிட்டு காட்டி இருக்கும் نُزِّلَ – என்பதற்கு படிப்படியாக என்று பொருள். மக்களின் உள்ளத்தை பலபடுத்த அல்லாஹ் குர் ஆனை படிப்படியாக இறக்கியதாக கூறுகிறான். இவ்வாறு ஒவ்வொரு சூழலுக்கு ஏற்ப குர்ஆன அருளப்பட்டதால் நம்பிக்கையாளர்களின் உள்ளத்தில் அல்லாஹ் இறைநம்பிக்கையை அதிகப்படுத்தினான். அல்லாஹ் பின் வருமாறு கூறுகிறான் தனது திருமறையில்.

      ஓர் அத்தியாயம் அருளப்படும் போது "இது உங்களில் யாருக்கு நம்பிக்கையை அதிகப்படுத்தியது?'' என்று கேட்போரும் அவர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோருக்கு இது நம்பிக்கையை அதிகமாக்கியது. அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். (அல் குர்ஆன் 9:124).

      நாம் மேலே கூறிய வசனங்கள் மக்களின் உள்ளத்தை வலுப்படுத்தும் என்றும் இறைநம்பிக்கையை அதிகப்படுத்தும் என்றும் கூறுகின்றன. இந்த இடத்தில் நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். 1400 வருடங்களுக்கு பிறகு உள்ள நமக்கு இந்த வசன்ங்களின் பொருளை தெளிவாக உணர வேண்டுமானால் இந்த வசனங்களின் இறங்கிய சூழலை நாம் அறிந்திருக்க வேண்டும். அன்றிருந்த மக்களுக்கு இந்த வசனங்கள் எப்படி இறைநம்பிக்கையை அதிகப்படுத்தியது என்பதை அந்த சூழலை கருத்தில் கொண்டு நாம் கவனிக்கும் பட்சத்தில் மிக தெளிவாக புரியும்.  ஆக இந்த இடத்தில்தான் ஹதீஸ்களின் தேவை ஏற்படுகிறது. எந்த ஒரு புத்தகமாக இருந்தாலும். அந்த புத்தகத்தை புரிந்து கொள்ள வேண்டுமானால்


1. அந்த புத்தகதில் அதன் விளக்கம் உள்ளதா என்பதை தேட வேண்டும். குர் ஆனில் நம்பிக்கை தொடர்பான விஷயங்களை இவ்வாறு ஆய்வு செய்வதால் புரிந்து கொள்ள முடியும்.


2. அந்த புத்தகம் எழுத்தப்பட்ட காலத்தை கருத்தில் கொள்வது. குர்ஆனை பொறுத்த வரை அதன் வசனங்கள் இறங்கிய சூழலை அறிந்து கொள்வது. இதை ஹதீஸ்களை ஆய்வு செய்வதால் மட்டுமே பெற முடியும்.

3. அந்த புத்தகத்தின் ஆசிரியரின் விளக்கம். இங்கு அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட தூதரால் விளக்கப்படுதல்.
  
      அல்லாஹ் தனது வேதத்தில் பின்வருமாறு கூறுகிறான்:
மக்களுக்கு இடைவெளி விட்டு நீர் ஓதிக் காட்டுவதற்காக குர்ஆனைப் பிரித்து அதைப் படிப்படியாக அருளினோம்.(அல் குர்ஆன் 17:106. )

         இந்த இறைதூதர் இடைவெளிவிட்டு ஓதிக்காண்பிக்க என்று அல்லாஹ் கூறுகிறான். எப்படி இந்த தூதர் ஓதிக்காண்பிப்பார் என்பதையும் அல்லாஹ் தனது இறைவேதத்தில் பின் வருமாறு கூறுகிறான்.

 لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولا مِنْ أَنْفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلالٍ مُبِينٍ (١٦٤)

      நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங்களை அவர் கூறுவார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். இதற்கு முன் அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருந்தனர்.( அல் குர்ஆன் 3:164. )

                 இந்த வசனத்தில் நான் சாயமிட்டிருக்கும் பகுதி  الْكِتَابَ وَالْحِكْمَةَ – எனபதற்கு வேதமும் ஞானமும் என்று பொருள். இந்த இடத்தில் و – என்பது தமிழில் இடம் பெறும் உம்மை தொகையாகும். அல்லாஹ் இறைதூதர் வேதத்தையும் ஞானத்தையும் கற்று கொடுப்பார் என்று தெளிவாக கூறுகிறான். மேலும் அல்லாஹ் பின்வருமாறு

 وَلَوْلا فَضْلُ اللَّهِ عَلَيْكَ وَرَحْمَتُهُ لَهَمَّتْ طَائِفَةٌ مِنْهُمْ أَنْ يُضِلُّوكَ وَمَا يُضِلُّونَ إِلا أَنْفُسَهُمْ وَمَا يَضُرُّونَكَ مِنْ شَيْءٍ وَأَنْزَلَ اللَّهُ عَلَيْكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا (١١٣)

 (முஹம்மதே!) அல்லாஹ்வின் அருளும், அன்பும் உம் மீது இல்லாதிருந்தால் அவர்களில் ஒரு பகுதியினர் உம்மை வழிகெடுக்க முயன்றிருப்பார்கள். அவர்கள் தம்மையே வழிகெடுத்துக் கொள்கின்றனர். அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. உமக்கு வேதத்தையும், ஞானத்தையும் அல்லாஹ் அருளினான். நீர் அறியாமல் இருந்ததை உமக்குக் கற்றுத் தந்தான். உம் மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாக உள்ளது.(அல் குர்ஆன் 4:113).

மேலும் நபி(சல்) அவர்கள் எதை கற்று கொடுத்தார்கள் எனபதும் மக்கள் தனகளது வீடுகளில் எதை ஓதுகிறார்கள் எனபதையும் தெளிவாக பின் வரும்வசனத்தில் கூறுகிறான்.
 وَاذْكُرْنَ مَا يُتْلَى فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللَّهِ وَالْحِكْمَةِ إِنَّ اللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا (٣٤)

      உங்கள் வீடுகளில் நினைவு கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள்! அல்லாஹ் நுணுக்கமானவனாகவும், நன்கறிந்தவனாகவும், இருக்கிறான். ( அல் குர்ஆன் 33:34)

           தனது வேத்தை விளக்க இறைதூதரை இறக்கியதும் அதற்கான  ஞானத்தையும் அவருக்கு கற்று கொடுத்தான் என்பதையும் விளங்க இதுவே போதுமானது .நாம் இனி இதுகுறித்த கட்டுரையாளரின் அறியாமையை வெளிப்படுத்துவோம்.[ refer:Source]

குர் ஆன் உண்மையில் உரைநடையா? கவிதையா? அல்லது வேறுவகையான இலக்கிய தன்மையுடையதா?
குற்றச்சாட்டு 1:
நமது பதில்:
      முதலில் இந்த கட்டுரையாளர் ஒரு விஷயத்தை புரியாமல் பேசுகிறார். அதாவது இலக்கியம் என்பது எழுத்து வடிவில் உருவாக்கப்படும் ஒரு படைப்பு. அது கட்டுரையாக கூட இருக்கலாம். இதை புரிந்து கொள்ள அரபிய அறிவு எல்லாம் தேவை இல்லை. சாதரண மொழியறிவு போதுமானது. ஆக இது அல் குர்ஆன் கவிதை யல்ல. இவர் இதுவரை கூறியதில் உண்மையான ஒரு செய்தி. இது குறித்து ஒரு நபிமொழி ஒன்றை பார்த்துவிட்டு இது குறித்து விளக்க துவங்கினால் சரியாக இருக்கும்.

      இப்னு அப்பாஸ்)ரலி) கூறியதாவது, நபி(சல்) அவர்களிடம் சென்ற அல் வலீத் பின் அல் முகிரா விடம் இறைதூதர் குர் ஆனை ஓதிக்காண்பித்தார்கள். அது அவனது உள்ளத்தை மென்மையாக்கியது போன்று தெரிந்தது. அபூஜகல் இது குறித்து கேள்விப்பட்டு அவரிடம் சென்று என் சிறியதந்தையே! நீங்கள் முஹம்மதிடம் சென்று அவரது வேதத்தை செவியுற்றதற்காக  (உங்களை தக்க வைக்க) உங்களது கிளையார்கள் உங்களுக்கு கொடுக்க செல்வததை திரட்டிகொண்டுள்ளனர்என்று கூறினான். அதற்கு அவன் கூறினான், “எனது செல்வ வளம் குறித்து குரைஷியர் நன்கு அறிவர்”. அப்போது அபூஜகல்அப்படியென்றால் நீங்களும் முஹம்மதை எதிர்கிறீர்கள் என்பதை மக்களுக்கு உணர்த்தும் வண்ணம் அவர் குறித்து மக்கள் வெறுக்குமாறு ஏதேனும் கூறுங்கள்என்று கூறினான். அப்போது(வலித்) அவன்: “நான் என்ன கூறுவது. அல்லாஹ்வின் மீது ஆணையாக என்னை விட உங்களில் கவிதை மற்றும் அதன் வகைகள் குறித்து நன்கு அறிந்த எவரும் இலர். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் கூறுபவை எந்த கவிதை வகையையும் ஒத்திருக்க வில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக, அவரது வார்த்தைகள் இனிமையானதாகவும், கருணைமிக்கதாகவும் அதன் துவக்கம் பழக்குலையாகவும், அதன் இறுதி பறிக்கப்பட்ட கனியாகவும் இருக்கிறது . அது சிறந்தது. அதை விட சிறந்தது இல்லை.நான் சொல்வது என்பதை குறித்து சிந்திக்க சிறிது நேரம் கொடுஎன கூறினான். பிறகு அது வொரு சுனியம் தான். அதை மற்றவரிடம் இருந்து கற்று கொண்டார் என்று குர் ஆன் கூறுவதை போன்று கூறினான் ( அல்குர்ஆன் 74: 24,25). (அல்லாஹ் இவர் குறித்துதான் அல்முத்தஸ்ஸிர் சூராவின் 11 முதல் 26 வரையிலான வசனங்களை இறக்கினான்).
            நூல் : அலி இப்னு அஹமத் அல் வாஹிதியின் அஸ்பாப் அல் நுசூல்

அறிவிப்பாளர் தொடர்:
Muhammad ibn ‘Abd Allah ibn Nu‘aym Muhammad ibn ‘Ali al-Saghani> Ishaq ibn Ibrahim al-Dabari> ‘Abd al-Razzaq> Ma‘mar> Ayyub al-Sikhtiyyani> ‘Ikrimah> Ibn ‘Abbas

ஆக மேற்கூறிய நபிமொழி குர் ஆன கவிதை யல்ல என்பதையும். வலீத் பின் அல் முகீரா அது எந்த வகையான கவிதை நடையிலும் சேரவில்லை என்பதையும் தெளிவாக கூறுகிறார். ஆம் அவரது வாசகங்கள் உன்மையானவை. அரபு கவிதையை சொல்லின் ஓசையை அடிப்படையாக கொண்டு பின் வரும 16 வகைகளாக பிரிக்கலாம். இந்த இலக்கணத்தின் அடிப்படையிலேயே அனைத்து அரபு கவிதைகளும் அடங்கி விடும். அவை  தாவில் (طويل) . பாஸித்(بسيط) . வாஃபிர்(وافر) . காமில்(كامل) . ரஜ்ஸ்(رجز)  .ஃகாஃபிஃப்(خفيف)  . ஹசஜ்(هزج) . முதகாரிப்(متقارب)  . முன்சரிஹ்(منسرح)  . முக்ததப்(مقتضب)  . முதாரிய்(مضارع)  .மதீத்(مديد)  .முஜ்தத்(مجتثّ)  .ரமால்(رمل)  .முதாரிக் (متدارك) . சரீஹ்(سريع)   [REFER]
                இதில் எந்த வகையான ஓசைநயத்திற்கும் ஒத்ததாய் அல் குர்ஆன் இல்லை. ஆக அது கவிதையல்ல என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அல்லாஹ்வும் தன்னுடைய வேதத்தில் அதை தெளிவாக குறிப்பிடவும் செய்கிறான் .(அல் குர்ஆன் 36:69). ஆக குர்ஆன் இலக்கியத்தின் எந்த வகையை சார்ந்தது. ஒருவேளை அது உரைநடையா என்று ஆய்வு செய்வோம். அரபிய உரைநடை இரண்டு வகையானது 1. சஜ் 2. முர்சல். இவற்றில் இரண்டாமவது சாதரண உரைநடை. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உரைநடை. முதலாமவது ஒசைநயத்துடன் கூடிய உரைநடை. ஆக குர் ஆனின் நடை சஜ் வகையதா என்றால் அது அதன் தன்மையுலும் இருந்து வேறுபட்டுள்ளது. சஜ் வகையான உரைநடைகளில் இறுதி ஒசையானது பரவலாக பல எழுத்து வடிவங்கள் மாறி மாறி இடம் பெறும். ஆனால் குர் ஆனில் ஒசை முடிவு பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் ஓரே ஒசை யுடையதாய் முடிவுறுவதாக Devin J. Stewart கூறுகின்றனர். இதனால்தான் Arthur J. Arberry, பின்வருமாறு கூறுகிறார்: குர் ஆன் உரையும் அல்ல கவிதையும் அல்ல. ஆனால் இவற்றின் தனிதன்மையுடைய இணைவு  (Arthur J. Arberry, The Koran, Oxford University Press, 1998) மேலும் இது குறித்து . Devin J. Stewart குறிப்பிடும் போது குர்ஆனின் நடையானது குரானிக் சஜ்( Quranic Saj) என்ற தனிதன்மையுடைய இலக்கிய அமைப்பு என்று கூறுகிறார்.( Devin J. Stewart, Saj’ in the Qur’an: Prosody and Structure). ஆக குர்ஆன் தனக்கென ஒரு இலக்கிய நடையுடையது என்பதை பார்த்தோம். இதுவல்லாத சில சிறப்புகள் இருப்பதாகவும் அறிஞர்கள் கூறுகினறனர். அவற்றுள் சில இந்த வசனங்களின் சொற்களில் நாம் எந்த வகையான மாற்றமும் செய்ய இயலாது. மீறி செய்யும் போது அதன் ஓசை நயம் கெட்டுவிடும் அல்லது பொருந்தா பொருள் ஏற்படும். அந்த இடத்தில் இருக்கும். அதற்கு இணையான வெறு வார்த்தைகளை அங்கு பொருத்த இயலமல் இருப்பதும் அதன் தனிச்சிறப்பில் ஒன்று. இதனால் தான் முஸைலமா முதல் பஸ்ஸார் இப்னு புர்த் என்று பல வித்தகர்களும் குர் ஆன் போன்ற ஒன்றை உருவாக்க எண்ணி மண்ணை கவ்வியதாக வரலாறு கூறுகிறது. [REFER]

குற்றச்சாட்டு 2:ஹதீஸின் தேவை என்ன?


நமது பதில்:
      அல்லாஹ்வே குர்ஆனில் நபி(சல்) அவர்களை வேததிற்கு விளக்கம் அளிக்கக்கூடியவராக அதன் அறிவுடன் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளான் என்பதை இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் விளக்கியுள்ளோம். அதில் இடப்பட்டிருக்கும் கட்டளைகள் யாவும் தெளிவானவை. அதற்கு செயல் விளக்கம் நபி(சல்) அவர்கள் கொடுப்பார்கள் என்பதை முன்பே இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் விளக்கியுள்ளோம்.

குற்றச்சாட்டு 3: பொருள் கொள்ள முடியாத வசனங்களா?

      இந்த வசனம் (அல் குர்ஆன் 3: 7) பல மொழிப்பெயர்ப்புகளில் இவர் குறிப்பிடும் படியாகவே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசனத்தை எப்படி பொருள் கொள்வது என்பது குறித்து முதலில் பார்ப்போம். அரபு மொழியின் அடிப்படையில் இந்த வசனத்திற்கு இருவாராக பொருள் கொள்ள முடியும் . ஆயினும் இந்த வசனத்திற்கு பின்வருமாறு பொருள்கொள்வதுதான் சரியானதாகும்.

 هُوَ الَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلا اللَّهُ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ كُلٌّ مِنْ عِنْدِ رَبِّنَا وَمَا يَذَّكَّرُ إِلا أُولُو الألْبَابِ (٧)

 (முஹம்மதே!) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய். இரு கருத்தைத் தருகின்ற மற்றும் சில வசனங்களும் உள்ளன. உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும், அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் அதில் இரு கருத்துடையவற்றைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர அதன் விளக்கத்தை (மற்றவர்கள்) அறிய மாட்டார்கள். அவர்கள் "இதை நம்பினோம்; அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே'' எனக் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர (மற்றவர்கள்) சிந்திப்பதில்லை.    (அல்குர்ஆன் 3:7)

     அல்லாஹ் இந்த வேதத்தில் பல இடங்களில் இதை தெளிவானதாக இறக்கியுள்ளதாக கூறியுள்ளான். புத்தகத்தை புரியும் அடிப்படையை முன்பே விளக்கியுள்ளோம். இதில் இடம் பெறும் பிற வசனங்களை கருத்தில் கொண்டு இந்த வசனத்தை இவ்வாறு பொருள் கொள்வதுதான சரியானதாகும். மேலும் இந்த வசனத்தை ஆழ்ந்து கவனித்தால் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளலாம் .எப்படி என்றால் அல்லாஹ்விற்கு மட்டுமே பொருள் விளங்கக்கூடிய வசனங்கள் எப்படி அது பல பொருள் தரும். அது எந்த பொருளும் தரவே கூடாது.  அதில் உள்ள பொருளை கொண்டு எப்படி உள்ளங்களில் கோளாறு உடையவர்கள் குழப்பம் செய்ய முடியும்.ஆக அது பல பொருள் தந்தாலும் அதனை கல்வியில் தேர்ந்தவர்கள் புரிந்து கொள்வார்கள் என்பது சரியான மொழியாக்கம் தான்
       இதற்கு உதாரணமாக அல்லாஹ்வின் தன்மைகளாக அவனது முகம், கை, கால் என்று இடம் பெறும் இடங்களில் எந்த மாற்று பொருளும் கொடுக்காமல் அப்படியே நம்பிக்கை கொள்ள வேண்டும். அதன் தன்மைகளை ஆய்வு செய்து அதில் நமது கருத்துகளை திணிக்க முற்படக்கூடாது. ஏன்னென்றால் அவனுக்கு நிகர் எதுவுமில்லை என்பது இந்த வேதத்தின்  தெளிவான தாய் வசனமாகும். அவனது தன்மைகள் குறித்த அறிவை நாம் பெற்றிருக்க வில்லை என்று ஏற்று கொள்ள வேண்டும். அல்லாஹ்விடம் இருந்து வந்ததாக நம்பிக்கை கொள்ள வேண்டும் 

குற்றச்சாட்டு 4: சட்டமாற்றம் ஏன்?


நமது பதில் :
   முதலில் இவ்வாறு வசனங்கள் மாற்றப்படுவதற்கு அல்லாஹ் தனது திருமறையில் என்ன காரணத்தை முன்வைகிறான் என்பதை பார்ப்போம்.
         ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா? (அல் குர்ஆன் 2:106)
     அல்லாஹ் மேற்கூறிய வசனத்தில் ஒரு வசனத்திற்கு பகரமாக இன்னொரு சிறந்த வசனம் இடம் பெறும் என்று கூறுகிறான். இதன் பொருள் அந்த காலத்திற்கு தகுந்த சட்டத்தை அல்லாஹ் மாற்றி அமைப்பான். உதாரணமாக ஆட்சி இல்லாத போது குற்றவியல் தண்டனை குறித்த சட்டங்களை மக்களுக்கு கூறுவதால் எந்த பயனும் இல்லை. அதனால் ஏன் குழப்பம் கூட ஏற்படலாம். இதே ஆட்சி அமைக்கும் போது குற்றவியல் தண்டனை குறித்த சட்டங்கள் வழங்கப்பட்டது. சூழல்கள் மாற மாற அதற்கு ஏற்ற சட்டங்களை அல்லாஹ் படிப்படியாக இறக்கியுள்ளான். இறுதியாக மாற்றப்பட்ட வசனங்கள் அனைத்தும் அதற்கான சூழல்கள் ஏற்படும் போது இன்றும் நடைமுறைபடுத்தும் சாத்தியகூறுகளுடன் உள்ளது. இதுவே இது இறைவேதம் என்பதற்கு சான்றாக உள்ளது.
குற்றச்சாட்டு 5: மாற்றப்பட்டவை ஏன் இன்னும் காணப்படுகிறது.

நமது பதில்:
        இதுவும் இறைவேதம் என்பதற்கு சான்றாக உள்ளது. மனிதனே வழங்கி மனிதனே மாற்றும் சட்டங்கள் அனைத்தும் இந்த கட்டுரையாளர் நினைப்பதுபோல் தான் இருக்கும். ஆனால் குர் ஆன் நபி(சல்) அவர்களது காலத்திலேயே தொகுப்பட்டதாக பின் வரும் நபிமொழிகள் கூறுகின்றன.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள்; ரமளான் மாதத்தில் அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்திக்கும் வேளையில் (வழக்கத்தை விட) அதிகமாக வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமளான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை அருளப்பட்டிருந்த) குர்ஆனை அவர்களுக்கு (ஓதிக் காடிக்) கற்றுத் தருவார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள், நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கும்போது அவர்கள் மழைக் காற்றை விட அதிகமாக (மக்களுக்கு) நன்மையை வாரி வழங்கும் கொடையாளராகத் திகழ்வார்கள்.
மேலும், நபி(ஸல்) அவர்கள், 'குர்ஆன் முழுவதையும் ஜிப்ரீல் எனக்கு ஓதிக் காட்டி வந்தார்" என்று கூறினார்கள்.
இதை அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் ஃபாத்திமா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.  (புஹாரி 3220)

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
ஒவ்வோர் ஆண்டுக்கொரு முறை (வானவர் ஜிப்ரீல் அதுவரை அருளப்பெற்ற) குர்ஆன் வசனங்களை நபி(ஸல்) அவர்களுக்கு (மொத்தமாக) ஓதிக்காட்டுவது வழக்கம். நபி(ஸல்) அவர்கள் இறந்த ஆண்டில் இரண்டுமுறை அவர்களுக்கு (ஜிப்ரீல்) ஓதிக்காட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் (ரமளான் மாதத்தின் இறுதிப்)பத்து நாள்கள் 'இஉதிகாஃப்' மேற்கொள்வது வழக்கம். அவர்கள் இறந்த ஆண்டு, (ரமளானில்) இருபது நாள்கள் 'இஉதிகாஃப்' மேற்கொண்டார்கள்.(புஹாரி 4998)

                மேற்குறிபிட்டபடி குர் ஆன ஒலி வடிவத்தில் அதன் அத்தியாயங்களில் உள்ள வசன்ங்கள்  சரிபடுத்தப்பட்டது. பிறகு நபிதொழர்கள் முழுமையாக எழுத்து வடிவில் தொகுத்தனர். அவர்கள் தொகுத்த போதும் அல்லாஹ்வின் தூதர் எப்படி ஒலிவடிவில் விட்டு சென்றார்களோ அதன் அடிப்படையிலேயே தொகுத்தனர். பின் வரும் செய்தி ஏன் சட்டம் மாற்றம் தொடர்பானது இடம் பெற்றிருக்கிறது என்பதை விளக்கிவதாய் உள்ளது.

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார்.
நான், உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம், 'உங்களில் மனைவியரைவிட்டு இற(க்கும் தருவாயில் இரு)ப்பவர்கள், தம் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றி விடாமல் ஓராண்டுவரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரணசாசனம் செய்யட்டும்! ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கிற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்துகொண்டால் (உறவினர்களாகிய) உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மிகைத்தோனும் விவேகமிக்கவனும் ஆவான்' எனும் (திருக்குர்ஆன் 02:240 வது வசனம் குறித்து இந்த) இறை வசனத்(தின் சட்டத்)தை (முந்தைய) மற்றோர் இறைவசனம் (திருக்குர்ஆன் 02:234) மாற்றிவிட்டதே! இதை 'ஏன் நீங்கள் (இன்னமும் குர்ஆன் வசனங்களில் சேர்த்து) எழுதுகிறீர்கள்?' அல்லது 'இதை ஏன் (நீக்காமல் குர்ஆனில் அப்படியே)விட்டுவைக்கிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் சகோதரர் மகனே! நான் குர்ஆனிலிருந்து எதையும் அதன் இடத்தைவிட்டு மாற்றமாட்டேன்' என்று பதிலளித்தார்கள்.(புஹாரி 4530). 
    ஏன் நபிதோழர்கள் மாற்றம் குறித்து அறிந்து இருந்தும் மாற்றவில்லையென்றால் அதன் உன்மை அமைப்பு அல்லாஹ்வால் வழங்கப்பட்டவாறு  அப்படியே பாதுகாக்கத்தான். மனிதனால் கூறப்பட்டிருந்தால் இவர் குறிப்பிடுவதுபோல மற்றபட்ட சட்டங்கள் இல்லாமல் இருந்திருக்கும். அதில் எந்த மாற்றத்தையும் புகுத்தவில்லை என்பதே குர் ஆன் இன்றுவரை பாதுகாக்கப்பட்டது என்பதற்கு சான்று.

No comments:

Post a Comment