பக்கங்கள் செல்ல

Saturday, May 16, 2015

மாற்று வழி

ச.நூருல் ஹசன்


அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.......

ஒரு வருடத்திற்கு தமிழகத்தில் மட்டும் 1.65 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு வெளியேறுகிறார்களாம்.....
ஆனால் வேலையோடு வெளியேருபவர்களோ.. வெறும் 32 முதல் 35 ஆயிரம் மாணவர்கள் மட்டும் தானாம்...
இது போதாதென்று டிப்ளோமா முடித்த மாணவர்களும் கூட இதே போன்ற நிலைதானாம்...

தமிழகத்தில் பட்டதாரிகளின்  எண்ணிக்கையில் பொறியியல் பயின்றவர்களின் எண்ணிக்கையே அதிகம் என புள்ளி விவரம் கூறுகிறது.. பட்டபடிப்பு முடித்தவர்களுக்கேனும் அவர்கள் சாராத துறையல்லாமல் மற்ற வேறு துறைகளில் வேலை கிடைத்து விடுகிறது...  ஆனால் பொறியியில் படித்தவர்களோ அவர்கள் சார்ந்த துறையில் வேலையில் ஈடுபடவே விருப்பம் கொள்கிறார்கள்... 

இப்படியே அனைவரும் இன்ஜினியரிங் டிப்ளோமா மட்டும் படித்து கொண்டும் பிறகு படித்த படிப்பிற்கு வேலை இல்லாமல் திண்டாடும் மாணவர்களும் வருடா வருடம் குறைந்த பாடில்லை.





ஏன் இதற்கு மாற்று வழியே இல்லையா?.. இல்லை மாற்று வழியில் செல்ல இந்த மாணவர்கள் தயங்குகிறார்களா?

உண்மை என்னவென்றால் இதுவே..அனைவருக்கும் ஒரு நாற்காலி, தனக்கு கீழ் வேலை செய்ய நான்கு பணியாட்கள்.. ஆப்பிள் ஐபோன்.. ஏசி பொருத்தப்பட்ட அறை.. பத்தாதற்கு பொழுது போக்கிற்கு முகநூல் வாட்சப்... இது தான் எல்லோரின் கனவும்.. ஆனால் நடப்பதோ...

உல்டா.......

வேலையை நாமே செய்த காலம் போய்.. வேலை நம்மை தேட வைக்கும் நிலைக்கு வந்துவிட்டோமே இதற்கு வேறு என்ன வழி...
முதலில் ஒரு ஒரு மாணவன் தன்னுடைய வாழ்கையில் எந்த வழியை தேர்ந்தெடுத்தால் நிலையான பொருளாதாரத்தை ஈட்ட கூடிய தொழிலை அல்லது வேலையை அடையலாம் என சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தினாலேயே தன்னுடைய விருப்பத்தை சரியான தொலை நோக்கு பார்வையல்லாத உலகின் கண்கவர், ஆடம்பர வாழ்க்கைக்காக ஆட்டுமந்தையில்  ஆடுகள் செல்வது போல் பொறியியல் அல்லது பட்டபடிப்பு  ஆகியவற்றை தேர்ந்தெடுத்து படிக்க சென்று விடுகிறான். அதிலும் குறிப்பாக பொறியியல் மாணவர்கள் தான் படித்து முடித்த உடனே கையில் வேலையோடு வெளி வந்து விடுவோம் என்ற கனவோடு கல்லூரிகளில் லட்சகணக்கில் பணத்தை ஈடு செய்கிறான். பட்ட படிப்புகளில் சேரும் மாணவர்களில் பாதிக்கும் அதிகமானோர் ஆசையும் பொறியியலை பயின்று வேலையோடு திரும்ப வேண்டும் என்ற கனவு நிறைவேறாமல் பட்டப்படிப்புகளை தேர்வு செய்கின்றனர். இல்லையேல் பொறியியலை நம்பி எலி பொறிக்குள் சிக்கிய நிலை தான் அவர்களுக்கும்.

மாற்று வழியை நாமே ஏற்படுத்த வேண்டும்

ஒரு இன்ஜினியரிங் மாணவன் படிக்க ஒரு வருடத்திக்று குறைந்தபட்சம் ஒரு லட்ச ரூபாய் செலவு செய்கிறான்.. அதுவும் அவன் படிப்பிற்காக அல்ல.. கல்லூரிகளின் பிழைப்புக்காக,... 
இதை ஒரு முதலீடாக நினைத்தே அனைத்து பெற்றோரும் அவ்வளவு பெரிய தொகையையும் பிள்ளையின் நல்வாழ்விற்காக செலவு செய்கின்றனர்.. ஆனால் முதலீடு நான்கு வருடம் கழித்து வெறும் காகிதத்தில் தான் கிடைக்கிறது.. பையனின் மார்க் சீட் மூலமாக...
அதே முதலீட்டை விவசயமோ அல்லது நலிவடைந்து தொய்வடைந்து கொண்டு வரும் தொழில்களில் செலுத்தினால்....



ஆம்...
இன்று மிகவும் நலிவடைந்து கொண்டிருக்கும் மிகவும் முக்கியமான தொழில் விவசாயம்...
நாம் படிப்பது நல்ல பொருளாதாரத்துடனான எதிர்காலத்தை எண்ணி தான்... விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டிருந்த எத்தனையோ மக்கள் முன்னொரு காலத்தில் செல்வந்தர்க்காகலாக வாழ்ந்துள்ளதை நாம் வரலாறுகளில் படித்திருப்போம் (அதனை வரலாறாக படிக்க வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டோம்.)
ஆனால் இன்றோ சேற்றில் கால் வைக்க மனமில்லாமல் நம் வாழ்க்கை சேறாக மாறும் நிலைக்கு இந்த இன்ஜினியரிங் படிப்பை நம்பி மாற்றி (ஏமாற்றி) கொண்டோம்...
இதோ அதனை மாற்ற ஒரு எளிய வழி...
ஒரு கல்லூரியில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் சுமார் 800 முதல் 1000 வரை இருப்பார்கள்..(எ.கா: முதல் வருடம்)அதில் வேலை கிடைப்பதோ 200 முதல் 300 பேருக்கே.. மீதமுள்ளோர் தான் செய்திருக்கும் முதலீட்டை (கல்லூரி கட்டணத்தை) 10 முதல் 20 மாணவர்கள் சேர்ந்து அதை வைத்து ஒரு நிலத்தை வாங்கி.. அங்கு விவசாயம் செய்ய துவங்கினால், பிறகு காலையும் மாலையும் மட்டுமே சிறிது நேரம் பொழுதை கழிப்பது போல் வயலில் வேலை செய்து விட்டு.. மீதமுள்ள நேரங்களில் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் முகநூளிலும் வாட்சப்பிலும் அழகாக நம் வாழ்கையை களிக்கலாம்... நல்ல முறையில்.. மேலும் உதவிக்கு டிப்ளோமா படித்த/படிக்க நினைக்கும் மாணவர்களும் இணைந்தால் கண்டிப்பாக விவசாயமும் வலம் பெரும்... தனக்கென தொழிலை உருவாக்கி விட்டோம் இனி எவனிடமும் கைகட்டி நிற்க தேவை இல்லை என்ற வைராக்கியத்துடனும் நம் வாழ்கையில் பயணிக்கலாம்....
இத்தோடு மட்டும் நில்லாமல் பேரிடர் காலங்களில் ஏற்படும் விவசாய இழப்புகளை எதிர்கொள்ள எண்ணிடலங்கா பொறியியல் மற்றும் அறிவியல் துறை மாணவர்கள் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி உள்ளனர். அவர்களின் கண்டுபிடிப்புகளை இது போன்ற முயற்சிகளின் போது பயன்படுத்தினோமேயானால் நிச்ச்சயம் நாட்டின் வளர்ச்சியையும் நாம் வார்த்தெடுப்பது உறுதி. மேலும் பல மாணவர்கள் அதனை போன்ற கண்டுபிடிப்புகளை சோதனையாக செயல்படுத்தி காட்டவும் இந்த முயற்சி ஒரு ஏதுவாக அமையும்..

வெறும் கார்போராட்டுகளுக்கு அடிமையாக மட்டுமே சேவகம் செய்வதை விட நாட்டின் வளர்ச்சிக்கு நேரடியாக உதவும் இது போன்ற முயற்சிகளை மாணவர்கள் கையிலெடுப்பது அவசியமும் கூட...



ஆனால்.....
இதையெல்லாம் எவன் சார்.. கேக்க போறான்...
நீங்க சொல்லிபுட்டு போய்டுவீங்க... அங்க சேத்துல இறங்கி உளுவுறது யாரு...
இந்த எண்ணம்...
ஏன் படித்த படிப்பிற்கு சம்மந்தமே இல்லாமல் கூலி வேலைக்கு வெளிநாடு செல்லும் போது தோன்றவில்லை...
ஏன் நான்கு லட்சம் செலவு செய்து பெற்றோரை வருத்தும் போது தோன்றவில்லை...
ஏன் வேலையே கிடைக்காமல் வெட்டியாக பொழுதை கழிக்கும் போது தோன்றவில்லை...
???????????????
மாற்றம் ஒன்றே மாறாதது...  பொறியியலும் பட்டமும் மட்டுமே வாழ்க்கைக்கு போதும் என நினைப்பவர்களிடதிலே தான் சாதனை என்ற வார்த்தை இடம் பெறாமல் போகிறது. சாதித்து காட்ட இது போன்ற முயற்சிகளே வழிவகுக்கும்.

தொழிலை நாம் உருவாக்குவோம்.. வேலையை நாம் கொடுப்போம்..
உழைப்போம்.. உயர்வோம்...

- ச.நூருல் ஹசன்.

No comments:

Post a Comment