பக்கங்கள் செல்ல

Thursday, December 31, 2015

இரசாயண பொறியியலில் அற்புதமான கண்டுபிடிப்புக்காக அதிஉயர் விருது பெற்ற முஸ்லிம்பெண் விஞ்ஞானி.

இரசாயண பொறியியலில் அற்புதமான கண்டுபிடிப்புக்காக அதிஉயர் விருது பெற்ற முஸ்லிம்பெண் விஞ்ஞானி.
========================================================
சிங்கப்பூரை தலைமையகமாக கொண்ட IBN (Institute of Bio Engineering and Nano Technology) என்ற இரசாயண பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் ஐந்து இலட்சம் அமெரிக்க டாலர்களையும், விருதையும் பரிசாக வென்றுள்ளது.
இப்போட்டியில் இஸ்லாமிய கூட்டமைப்பில் வாழும் முஸ்லிம் விஞ்ஞானிகளும், உலகில் மற்றைய நாடுகளில் வாழும் முஸ்லிம் விஞ்ஞானிகளும் கலந்து கொண்டார்கள்.
இவரின் வெற்றியை பெற்றுத்தந்த கண்டுபிடிப்பானது மிகச்சிறிய நனோ உயிரியல் துகளாகும். Nano Particles) இது உடம்பில் நீரிழிவுநோயாளிகளுக்கு சீனியின் அளவை கணக்கிட்டு, எப்பொழுது இன்சுலின் உடம்புக்குள் செலுத்த வேண்டுமென்பதை நோயாளிக்கு அறியத்தரும். அப்பொழுது அவர்கள் இன்சுலினை வாயினூடாகவோ, நாசியினூடாகவோ உடம்பில் சேர்க்க முடியும். இன்சுலின் ஊசி குத்துவது தவிர்க்கப்படும்.
இது மனித குலத்திற்கு மிகவும் வரப்பிரசாதமாகுமென்று போட்டியைநடாத்தியவர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஈரானில் தெஹ்ரானில் உள்ள விஞ்ஞான ஆராச்சிகழகம் இப்போட்டியை நடாத்துகிறது. உலகிலுள்ள 600 இஸ்லாமிய விஞ்ஞானிகள் இப்போட்டியில் கலந்து கொண்டார்கள். நோபல் பரிசுக்கு சமமாக இஸ்லாமிய உலகில் இவ்விருது கருதப்படுகிறது. IBN நிறுவனம் இதுவரை 150 ற்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்காக, கண்டுபிடிப்பு உரிமைகளை (Patent Rights) கொண்டுள்ளது.
இதில் வெற்றிபெற்ற சிங்கப்பூரை சேர்ந்த இந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஓர் இஸ்லாமிய பெண்ணாவார். 49 வயதுடைய பேராசிரியர் ஜாக்கி இங்க், தாய்வானிலுள்ள தாய்பேயை பிறப்பிடமாக கொண்டவர். 30 வயதில் இஸ்லாத்தை தழுவிய இவர் சிங்கபூரிலும், தாய்வானிலும், அமெரிக்காவிலும் இரசாயண பொறியியலில் உயர் கல்வி கற்றார்.
1992 ல் உலகின் புகழ்பெற்ற அமெரிக்க பல்கலைக்கழகமான மஸசூஸெட் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் சேர்ந்து 2005 ம் ஆண்டுவரை இரசாயண பொறியியலில் பேராசிரியராக பணி புரிந்தார். அக்கால கட்டத்தில் ( 2003 ம் ஆண்டு) IBN என்ற ஆராச்சி நிறுவனத்தை உருவாக்கினார்.



No comments:

Post a Comment