பக்கங்கள் செல்ல

Sunday, May 10, 2020

எப்படி அரேபியாவை இஸ்லாம் குறுகிய காலத்தில் வென்றது? - போர் கைதிகளின் உரிமை!

அன்றைய காலத்தில் போரில் வெற்றி பெற்றவர்கள், மீதமுள்ள எதிர் அணியினரை அடிமைகளாக எடுத்துக்கொண்டனர். போர்கைதிகளுக்கான உரிமை என்ற சிந்தனையே அப்போது இல்லை.
இந்த நிலையில் தான் இஸ்லாமிய வரலாற்றின் முதல் போர் "பத்ரு" என்ற இடத்தில் நடந்து அதில் பல மடங்கு எண்ணிக்கையிலும், ஆயுதத்திலும் பலமான எதிரிகளை இறைவனின் துணையால் முஸ்லிம்கள் வென்றனர்.
இதில் குறிப்பிடத்தக்க சிறப்பு என்னவென்றால், போர் கைதிகள் எப்படி நடத்தப்படவேண்டும் என்று சட்டம் இறைவனால் கொடுக்கப்படுகின்றது.
"பத்ரு போர் முடிந்தவுடன் கைதிகள் நபிகளிடம் கொண்டு வரப்படுகின்றனர். அதில் அல்-அப்பாஸ் என்பவரும் ஒருவர். சட்டையில்லாமல் வருகிறார். அவருக்கு சரியான சட்டையை கொடுக்குமாறு தோழர்களிடம் கூறுகின்றார்கள். அப்துல்லா பின் உபை என்பவற்றின் சட்டை பொருந்தி போகின்றது. நபியவர்கள் தங்களின் சட்டையை அப்துல்லாவிற்கு கொடுக்கின்றார்கள்." (Bhukari)
அதேபோல் மற்றொரு கைதியான தமாமா அல்-ஹனாஃபி, நபியவர்களிடம் கொண்டு வரப்படுகின்றார். அவர் இஸ்லாத்தை ஏற்க விரும்பவில்லை . அவர் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்: “நீங்கள் என்னைக் கொன்றால், என்னைக் கொன்றதற்காக பழி தீர்க்கப்படும் ஒரு மனிதனைக் கொன்றுவிடுவீர்கள். நீங்கள் கருணையுடன் நடந்துகொண்டால் , நன்றி பாராட்டக்கூடிய ஒரு மனிதனுக்கு நீங்கள் கருணையுடன் இருக்கிறீர்கள். நீங்கள் பணத்திற்கு ஆசைப்பட்டால், நீங்கள் விரும்பும் தொகையை என்னிடம் கேளுங்கள். ”
நபி (ஸல்) அவர்கள் இரண்டு நாட்களாக அவர் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. மூன்றாம் நாளில், நபி (ஸல்) அவர்கள் அல்-ஹனாபியை விடுவிக்குமாறு தனது தோழர்களுக்கு கட்டளையிட்டனர்.

திருடர்கள் என்ற வதந்தி வைத்தே இன்று மக்கள் கொல்லப்படுகின்றனர் ஆனால் அன்று தங்களை கொள்ள வந்தவர்களையே கண்ணியமாக நடத்தியது இஸ்லாம்.

போரில் தோல்வியடைந்து அவமானப்பட்டு தங்களின் உயிர்க்கு அஞ்சியவர்களாக இருந்த கைதிகளிடம் சொல்லுமாறு இறைவன் இந்த வசனத்தை அருளினான்:

"நபியே! உங்கள் வசத்தில் இருக்கும் கைதிகளை நோக்கிக் கூறுவீராக: “உங்களுடைய உள்ளங்களில் ஏதாவது ஒரு நன்மை இருப்பதாக அல்லாஹ் அறிந்தால், உங்களிடமிருந்து (ஈட்டுத்தொகையாக) எடுத்துக் கொள்ளப்பட்டதைவிட (இவ்வுலகில்) மேலானதை உங்களுக்கு அவன் கொடுப்பான்; (மறுமையில்) உங்கள் பாவங்களையும் மன்னிப்பான் - அல்லாஹ் மன்னிப்போனாகவும், கிருபை உடையோனாகவும் இருக்கின்றான்." [8:70]

கைதிகள் மனம் மாறினார்கள்...அரேபியாவும் மனம் மாறியது.

No comments:

Post a Comment